தமிழக பள்ளிக் கல்வி பாடத்திட்டத்தில் பிளஸ் 2 பொதுத்தேர்வு கடந்த மார்ச் மாதம் 2-ம் தேதி முதல் 26-ம் தேதி வரை நடைபெற்றது. இந்த தேர்வை மாநிலம் முழுவதும் 8லட்சம் மாணவ-மாணவிகள் எழுதினர். இவர்களின் விடைத்தாள் மதிப்பீட்டுப் பணிகள் கடந்த மாதம் 6-ம் தேதி முதல் 20-ம் தேதி வரை நடத்தி முடிக்கப்பட்டது.

தொடர்ந்து தேர்வு முடிவுகளை வெளியிடுவதற்கான பணிகளை தேர்வுத்துறை மேற்கொண்டு வருகிறது. முன்னதாக மே மாதம் 8-ம் தேதி முடிவுகள் வெளியாகும் என அறிவிக்கப்பட்டது. ஆனால் தற்போது தேர்வு முடிவுகள் தள்ளிப் போக வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

பிளஸ் 2 விடைத்தாள் மதிப்பீடு முடிக்கப்பட்டு, மாணவர்களின் மதிப்பெண்கள் இணையதளத்தில் பதிவேற்றப்பட்டுள்ளது. எனினும் ஆட்சி மாற்றம் ஏற்பட்டுள்ளதால், தேர்வு முடிவுகளை வெளியிட அரசின் ஒப்புதல் பெறவேண்டும். இதனால் திட்டமிட்டப்படி வரும் 8-ம் தேதி வரை பிளஸ் 2 முடிவுகளை வெளியிட முடியாது. புதிய அரசு அமைந்ததும், உரிய ஒப்புதல் பெற்று தேர்வு முடிவுகளை வெளியிட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாக பள்ளிக் கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version