அமெரிக்காவின் 250-வது சுதந்திர தினத்தை முன்னிட்டு, அந்நாட்டு அதிபர் டொனால்ட் டிரம்புக்கும், அமெரிக்க மக்களுக்கும் பிரதமர் நரேந்திர மோடி தனது வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக சமூக வலைதளமான எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள பிரதமர் மோடி, “140 கோடி இந்தியர்கள் சார்பில், அமெரிக்காவின் வரலாற்றுச் சிறப்புமிக்க 250-வது சுதந்திர தினத்தை முன்னிட்டு அதிபர் டொனால்ட் டிரம்புக்கும், அமெரிக்க மக்களுக்கும் எனது இதயப்பூர்வமான வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.

மேலும், “இந்தியா மற்றும் அமெரிக்கா இடையேயான உறவு என்பது வெறும் மூலோபாய கூட்டாண்மை மட்டுமல்ல. ஜனநாயகம், சட்டத்தின் ஆட்சி மற்றும் மக்களின் எல்லையற்ற திறன் மீதான நம்பிக்கை ஆகியவை இரு நாடுகளின் நட்புறவை உலக நன்மைக்கான வலிமையான சக்தியாக மாற்றியுள்ளன” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

 

அத்துடன், “அடுத்த 250 ஆண்டுகளும் அமெரிக்காவுக்கு மேலும் வளம், அமைதி மற்றும் முன்னேற்றத்தை கொண்டு வரட்டும். இந்தியா – அமெரிக்கா கூட்டாண்மை புதிய உச்சங்களை எட்டட்டும்” என்றும் பிரதமர் மோடி தனது வாழ்த்து செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version