Close Menu
    What's Hot

    பிளாஸ்டிக் பாக்கெட்டுக்கு பதில் தானியங்கி பால் விற்பனை: ஆவின் புதிய திட்டம்

    கரூர் கோயில் நிலங்கள் விவகாரம்: விவரங்களை தாக்கல் செய்ய உத்தரவு

    ரூ.100 கோடி பழனி கோவில் நிலம் மோசடி பதிவு? – வன்மத்துடன் அவதூறு பரப்புகின்றனர்– அமைச்சர் ரமேஷ்

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • உலகம்
    • சிறப்புக் கட்டுரைகள்
    • வர்த்தகம்
    • More
      • டெக்னாலஜி
      • LIFESTYLE
      • koilgal
    TN Talks
    Home»Featured»நாளை மறுநாள் POLIO DROPS முகாம்..!! CM விஜய் தொடங்கி வைக்கும் ஏரியா எது தெரியுமா..??
    Featured

    நாளை மறுநாள் POLIO DROPS முகாம்..!! CM விஜய் தொடங்கி வைக்கும் ஏரியா எது தெரியுமா..??

    editor5By editor5June 26, 2026No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    image 16 17
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    50 லட்சத்திற்கும் அதிகமான குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருத்து வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

    தமிழகம் முழுவதும் குழந்தைகளை போலியோ நோயிலிருந்து பாதுகாக்கும் வகையில் நடைபெறும் தீவிர போலியோ சொட்டு மருந்து முகாமை முதலமைச்சர் விஜய் நாளை மறுதினம் (ஞாயிற்றுக்கிழமை) சென்னை பாலவாக்கத்தில் உள்ள அரசு ஆதி திராவிடர் பள்ளியில் காலை 8 மணிக்கு தொடங்கி வைக்கிறார். இந்த முகாம் தமிழகம் முழுவதும் ஒரே நாளில் தீவிரமாக நடைபெற உள்ளது. அரசு சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இந்த சிறப்பு இயக்கத்தில் 5 வயதுக்குட்பட்ட சுமார் 50 லட்சத்திற்கும் மேற்பட்ட குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்க திட்டமிடப்பட்டுள்ளது.

    மொத்தம் 43,051 மையங்களில் இந்த மருந்து வழங்கப்படும் என்று சுகாதாரத் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள், மருத்துவமனைகள், அங்கன்வாடி மையங்கள், பள்ளிகள், குழந்தைகள் பூங்காக்கள், பேருந்து நிலையங்கள், ரயில் நிலையங்கள் உள்ளிட்ட மக்கள் அதிகம் கூடும் பொது இடங்கள் அனைத்தும் முகாம் மையங்களாக செயல்படுத்தப்படும். குழந்தைகளின் உடல்நலத்தை உறுதி செய்யும் வகையில், சுகாதாரப் பணியாளர்கள், ஆசிரியர்கள், அங்கன்வாடி ஊழியர்கள், தன்னார்வலர்கள் என பெரும் படை ஒன்று இந்த இயக்கத்தில் ஈடுபடுத்தப்படுகிறது.

    போலியோ ஒழிப்பு இயக்கம் தொடர்பாக முதலமைச்சர் விஜய் கூறுகையில், “குழந்தைகளின் எதிர்காலத்தைப் பாதுகாக்கும் இந்த முக்கியமான பணியில் அனைத்து பெற்றோர்களும் தங்கள் குழந்தைகளை உடனடியாக முகாம்களுக்கு அழைத்து வர வேண்டும். ஒரு சொட்டு மருந்து மூலம் பல ஆண்டுகளின் உழைப்பைப் பாதுகாக்க முடியும்” என்றார். தமிழக சுகாதாரத் துறை இந்த இயக்கத்தை வெற்றிகரமாக நடத்துவதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் செய்துள்ளது. மருந்து பற்றாக்குறை ஏற்படாத வகையில் போதிய அளவு சொட்டு மருந்துகள் ஏற்கெனவே மாவட்டங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.

    மேலும், கிராமப்புறங்கள், நகர்ப்புற ஏழைப் பகுதிகள், குடிசை மற்றும் சிறுபான்மையினர் வாழும் பகுதிகளில் சிறப்பு கவனம் செலுத்தப்படும். போலியோ தடுப்பு மருந்து வழங்கும் இந்த முகாம் மூலம் தமிழகத்தை போலியோ நோய் இல்லாத மாநிலமாக மாற்றும் அரசின் உறுதியான நோக்கம் நிறைவேறும் என எதிர்பார்க்கப்படுகிறது. பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளுக்கு 5 வயது வரை தவறாமல் சொட்டு மருந்து கொடுக்க வேண்டும் என சுகாதாரத் துறை வலியுறுத்தியுள்ளது.

    cm vijay polio drops
    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleபோதைப்பொருள் எதிர்ப்பு: முதல்வர் எழுதிய விழிப்புணர்வு வாசகம்!
    Next Article சிவப்பு துண்டை இகழ்ந்தால் இரட்டைப் போர் யானை பதிலடி கொடுக்கும்..!! அமைச்சர் ராஜ்மோகன் வார்னிங்..!!
    editor5

    Related Posts

    பிளாஸ்டிக் பாக்கெட்டுக்கு பதில் தானியங்கி பால் விற்பனை: ஆவின் புதிய திட்டம்

    July 14, 2026

    கரூர் கோயில் நிலங்கள் விவகாரம்: விவரங்களை தாக்கல் செய்ய உத்தரவு

    July 14, 2026

    ரூ.100 கோடி பழனி கோவில் நிலம் மோசடி பதிவு? – வன்மத்துடன் அவதூறு பரப்புகின்றனர்– அமைச்சர் ரமேஷ்

    July 14, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    பிளாஸ்டிக் பாக்கெட்டுக்கு பதில் தானியங்கி பால் விற்பனை: ஆவின் புதிய திட்டம்

    கரூர் கோயில் நிலங்கள் விவகாரம்: விவரங்களை தாக்கல் செய்ய உத்தரவு

    ரூ.100 கோடி பழனி கோவில் நிலம் மோசடி பதிவு? – வன்மத்துடன் அவதூறு பரப்புகின்றனர்– அமைச்சர் ரமேஷ்

    பழநி கோயிலுக்கு சொந்தமான ரூ.100கோடி நிலம் மோசடி வழக்கு..! அமைச்சரை தொடர்புபடுத்த வேண்டாம்..!

    கோகுல்ராஜ் கொலை வழக்கு: தமிழக அரசுக்கு உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.