தமிழ்நாட்டில் சுமார் 40,000 மேற்பட்ட முகாம்களில் இன்று போலியோ சொட்டு மருந்து வழங்கப்படுகிறது. 5வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு இந்த போலியோ சொட்டு மருந்து வழங்கும் முகாமை முதலமைச்சர் சென்னையில் தொடங்கி வைத்தார். அதன்படி,

காஞ்சிபுரம் மாவட்டத்தில் இன்று 741 மையங்களில் ஐந்து வயதுக்கு உட்பட்ட 91,427 குழந்தைகளுக்கு சொட்டு மருந்து வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. காலை 7 மணிக்கு தொடங்கி மாலை 5 மணி வரை நடைபெறும் இந்த முகாமில் 2964 பணியாளர்கள் ஈடுபட்டுள்ளனர்.

அரசு மருத்துவமனைகள் ஆரம்ப சுகாதார நிலையங்கள் இரயில் நிலையங்கள் பேருந்து நிலையங்கள் உள்ளிட்ட பொதுமக்கள் அதிக அளவில் கூடும் இடங்களை இந்த போலியோ சொட்டு மருந்து வழங்கும் முகாம் நடைபெறுகிறது.

அதேப் போல, கோவை அரசு மருத்துவமனையில் போலியோ சொட்டு மருந்து முகாமினை பிற்படுத்தபட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத் துவக்கி வைத்தார். நகர்ப்புறங்களில் சுமார் 491 மையங்களிலும், கிராம பகுதிகளில் 1,124 மையங்களிலும் என 1,615 மையங்களில் இன்று போலியோ சொட்டு மருந்து வழங்கப்படுகின்றது. 5 வயதுக்கு உட்பட்ட 2 லட்சத்து 97 ஆயிரம் குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து கொடுக்கபடுகின்றது.

அதுமட்டுமின்ரி பேருந்து நிலையம், ரயில்நிலையம்,விமான நிலையம் என பொதுமக்கள் அதிகம் கூடும் 32 இடங்களில் மையம் அமைக்கப்பட்டுள்ளது எனவும், இது தவிர 22 இடங்களில் நடமாடும்போலியோ சொட்டு மருந்து மையம் அமைக்பட்டுள்ளது எனவும், மாலை 5 மணி வரை இந்த சொட்டு மருத்து வழங்கும் பணி நடைபெறும் என அமைச்சர் சம்பத் தெரிவித்தார்.

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version