72-வது தேசிய திரைப்பட விருதுகள் அறிவிக்கப்பட்டதில், சிறந்த தமிழ் திரைப்படமாக தனுஷ் நடித்து இயக்கிய ராயன் திரைப்படம் தேர்வு செய்யப்பட்டுள்ளது.

இதற்கு கோலிவுட் தரப்பில் ஆதரவும் எதிர்கருத்துகளும் முன்வைப்படும் நிலையில், நெட்டிசன்கள் சிலர், கொந்தளித்து கருத்து பதிவிட்டிருக்கிறார்கள்…

  • 1.    அப்படி இந்த படத்துல என்ன இருக்குன்னு national award தாரங்க. ரெண்டு தம்பி, ஒரு தங்கச்சி. தங்கச்சி ரேப் பண்ணிடுவாங்க, இவர் போய் பழி வாங்குவான், தம்பிகளே சேர்ந்து வந்து அண்ணனை கொலை பண்ண வருவாங்க, இதுக்கு தான் நேஷனல் அவார்டு!
  • 2.     இது ராயனுக்கான விருது அல்ல, ராமனுக்கான விருது
  • 3.     ராயன் சிறந்த தமிழ்ப் படம் என்று தேசிய விருது அறிவிப்பு. தேசிய விருதுப் படம் என்றால் நடுவர் மட்டும் பார்த்துட்டு பத்திரமா அதை ட்ரங்க் பெட்டிக்குள் வச்சுடுவாங்க என்று முன்னொரு காலத்தில் சாலமன் பாப்பையா சொன்னது ஞாபகத்துக்கு வருது.
  • 4.     ‘ராயன்’ படத்திற்கு தேசிய விருது… எனக்கு ஒன்னு மட்டும் புரியல… இந்தப் படத்தில் அப்படி என்ன heavyயா இருந்துச்சு, சிறந்த தமிழ்ப்படம் தேசிய விருது கொடுக்க?
  • 5.     எதன் அடிப்படையில் ராயன் படத்துக்கு தேசிய விருது,… அண்ணன் தம்பி தங்கச்சிகுள்ளேயே அடிச்சிகிட்டு சாவாய்ங்களே அதுக்கு?
  • 6.     தங்கலான் ,மகாராஜாவுக்கு நடுவால தேசிய விருது தர்ற அளவுக்கு ராயன்ல என்ன இருக்குன்றதைலாம் தாண்டி, அவார்ட் வாங்கிட்டு ஓம் நமசிவாயன்னு நாலு பக்கத்துக்கு பெரளுவான் அதை நினைச்சா தான் கெதக்குன்னு இருக்கு
  • 7.     Sun pictures தயாரிப்பில் உதயநிதி வெளியிட்டராயன்படத்துக்கு சிறந்த திரைப்படத்திற்காண தேசிய விருதை வழங்கியுள்ளது மோடியின் ஒன்றிய பாஜக அரசு
  • 8.     ஏன்டா காலைல 5 மணிக்கு சிக்கன் ரைஸ் கடைய திறக்க போற மாதிரி ஒரு சீன் இருக்கு ராயன் படத்துல… அந்த படத்துக்கு National Award வேறயா. National Award க்கு உண்டான மரியாதை போச்சுடா உங்களால… ஆல்ரெடி கேசரி படத்துக்கு கொடுத்தப்பவே போயிருச்சு அப்படிங்கிறது வேற விஷயம்.

 

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version