நடிகர் தனுஷ் இயக்கி நடித்து சன் டிவி நெட்வொர்க் தயாத்து வழங்கிய ராயன் திரைப்படம் சிறந்த தமிழ் திரைப்படத்துக்கான தேசிய விருதினைப் பெற்றுள்ளது.

ஒவ்வொர் ஆண்டும் மத்திய அரசால் தேசிய திரைப்பட விருதுகள் வழங்கப்பட்டு வருகின்றன. சிறந்த நடிகர், நடிகைகள், இயக்குநர், ஒளிப்பதிவாளர், இசையமைப்பாளர், பாடகர் என பல்வேறுபிரிவுகளில் தேசிய விருதுகள் வழங்கப்பட்டு வருகின்றன. அதன்படி, 2024-ம் ஆண்டுக்கான 72-வது தேசிய திரைப்பட விருதுகளை தகவல் மற்றும் ஒளிபரப்புத் துறை அமைச்சகம் அறிவித்தது.

இதன்படி சிறந்த தமிழ் திரைப்பாடத்துக்கான தேசிய விருதினை ராயன் திரைப்படம் தட்டிச் சென்றிருக்கிறது. ராயன் திரைப்படம் நடிகர் தனுஷ் இயக்கி நடித்த படமாகும். சன் டிவி நெட்வொர்க் இந்தப் படத்தை தயாரித்துள்ளது.

 

விருதுகள் விவரம்:

  • சிறந்த தமிழ் திரைப்படம்: ராயன் (Sun Pictures)
  • சிறந்த இயக்குநர்: ராஜ்குமார் பெரியசாமி – அமரன்
  • சிறந்த பின்னணி இசை: ஜி.வி. பிரகாஷ் – அமரன்
  • சிறந்த படத்தொகுப்பு: கலைவாணன் – அமரன்
  • சிறந்த சண்டைப் பயிற்சி இயக்குநர்: அனல் அரசு – மகாராஜா
  • சிறந்த துணை நடிகை: சச்சனா – மகாராஜா
  • தேசிய, சமூக மற்றும் சுற்றுச்சூழல் மதிப்புகளை ஊக்குவிக்கும் சிறந்த திரைப்படம்: கேப்டன் மில்லர் (இயக்கம்: ராஜ்குமார் பெரியசாமி)
  • சிறப்பு பாராட்டு (Special Mention): மெய்யழகன், கேப்டன் மில்லர்

ஆவணப்படம் / குறும்படம் (Non-Feature Film) பிரிவு

  • சிறந்த ஒலியமைப்பு: Blue (தமிழ்) – டி.எஸ். ஹரி ஹர சுதன்
  • சிறந்த ஒளிப்பதிவு: Life in Loom (ஆங்கிலம், தமிழ், இந்தி, அசாமி, வங்காளம்) – எட்மண்ட் ரான்சன்

72-வது தேசிய திரைப்பட விருதுகளில் தமிழ் திரைப்படங்கள் பல்வேறு முக்கிய பிரிவுகளில் விருதுகளை வென்று கவனம் ஈர்த்துள்ளன.

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version