Close Menu
    What's Hot

    AI, கிளவுட் சேவை: இந்தியாவில் முதலீட்டை அதிகரிக்கும் அமேசான்

    பிளாஸ்டிக் பாக்கெட்டுக்கு பதில் தானியங்கி பால் விற்பனை: ஆவின் புதிய திட்டம்

    கரூர் கோயில் நிலங்கள் விவகாரம்: விவரங்களை தாக்கல் செய்ய உத்தரவு

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • உலகம்
    • சிறப்புக் கட்டுரைகள்
    • வர்த்தகம்
    • More
      • டெக்னாலஜி
      • LIFESTYLE
      • koilgal
    TN Talks
    Home»Featured»இரவில் மின்வெட்டுக்கு காரணமே இதுதான்..!! ராதாகிருஷ்ணன் பரபரப்பு தகவல்..!!
    Featured

    இரவில் மின்வெட்டுக்கு காரணமே இதுதான்..!! ராதாகிருஷ்ணன் பரபரப்பு தகவல்..!!

    editor5By editor5June 13, 2026No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    Screenshot 2026 06 13 at 3.24.09 PM
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    இரவு நேரத்தில் 21000 மெகாவாட் மின்சாரம் தேவை என்ற அளவில் போதிய மின்சாரம் கை இருப்பில் உள்ளது என்று தமிழ்நாடு மின்வாரிய தலைவர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

    திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரிக்கு அருகிலுள்ள பஞ்செட்டி துணை மின் நிலையத்தில் தமிழ்நாடு மின்வாரியத் தலைவர் ராதாகிருஷ்ணன் விரிவான ஆய்வு மேற்கொண்டார். மாநிலம் முழுவதும் அறிவிக்கப்படாத மின்வெட்டு தொடரும் நிலையில், துணை மின் நிலையங்களின் கட்டமைப்பு வசதிகள், மின் விநியோக அமைப்பு மற்றும் பராமரிப்புப் பணிகள் குறித்து அவர் அதிகாரிகளிடம் விரிவாக கேட்டறிந்தார்.

    பின்னர் செய்தியாளர்களை சந்தித்த தலைவர் ராதாகிருஷ்ணன், “கடுமையான வெயில் காரணமாக சென்னையில் மின் நுகர்வு இதுவரை இல்லாத உச்சத்தைத் தொட்டுள்ளது. 5008 மெகாவாட் என்ற புதிய உச்சம் பதிவாகியுள்ளது” என்றார். மாநில அளவில் இரவு நேர மின் தேவை சுமார் 21,000 மெகாவாட்டாக உள்ள நிலையில், போதுமான மின் உற்பத்தி மற்றும் கையிருப்பு இருப்பதாக அவர் உறுதிப்படுத்தினார். இருப்பினும், இரவு நேரங்களில் மின் பயன்பாடு திடீரென அதிகரிப்பதால் ஓவர்லோட் ஏற்பட்டு, துணை மின் நிலையங்கள் மற்றும் மின் மாற்றிகளில் பழுதுகள் ஏற்படுவதே மின்தடைக்கு முக்கிய காரணம் என்பதை அவர் சுட்டிக்காட்டினார்.

    இந்தப் பிரச்சினையைச் சரிசெய்ய பாதிக்கப்பட்ட இடங்களை உடனடியாக கண்டறிந்து, கூடுதல் பீடர்கள் மற்றும் டிரான்ஸ்பார்மர்கள் பொருத்தும் பணிகள் போர்க்கால அடிப்படையில் நடைபெற்று வருவதாகத் தெரிவித்தார். மேலும், தரம் உயர்த்தப்பட்ட பல துணை மின் நிலையங்கள் விரைவில் செயல்பாட்டுக்கு வர உள்ளன. இரவு நேரங்களில் அனைத்து நிலை அதிகாரிகளும் கூடுதல் ரோந்துப் பணியில் ஈடுபட்டு மின்தடைகளை உடனுக்குடன் தீர்க்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. சாலை விரிவாக்கம் உள்ளிட்ட வளர்ச்சிப் பணிகளுக்காக 11 நிறுவனங்கள் மேற்கொள்ளும் சாலை வெட்டும் பணிகள் மின்வயர்களுக்கு சேதம் விளைவிப்பதால் மின்தடை அதிகரிப்பதாகவும், இதற்கு மின்துறையுடன் ஒருங்கிணைந்து செயல்பட அறிவுறுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.

    கடைநிலை ஊழியர்கள் தீவிரமாகக் களப்பணி ஆற்றி வருவதாகப் பாராட்டிய ராதாகிருஷ்ணன், “சவால் நிறைந்த இந்தப் பணியில் அடிமட்ட ஊழியர்களுக்கு வீண் அழுத்தம் கொடுக்கக் கூடாது” என்று பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்தார். பிரச்சினைகளை விரைவாகத் தீர்க்க கூடுதல் பணியாளர்களும் நியமிக்கப்பட்டுள்ளனர். பழைய மின் கம்பங்கள் மற்றும் ஒயர்கள் மாற்றப்படாதது குறித்த கேள்விக்கு, பொதுமக்கள் புகார்களை உடனடியாக புகார் புத்தகத்தில் பதிவு செய்யுமாறு அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளதாகவும், ஊடகங்கள் மற்றும் சமூக ஊடகங்கள் வழியாக வரும் புகார்களுக்கு உடனுக்குடன் நடவடிக்கை எடுக்கப்படுவதாகவும் அவர் தெரிவித்தார்.

    நிதிப் பற்றாக்குறை இருந்தபோதிலும் ஊழியர்களின் முயற்சியால் மின் வெட்டுப் பிரச்சினையை கட்டுப்படுத்தி வருவதாகக் கூறிய அவர், 200 யூனிட் இலவச மின்சாரத் திட்டம் போன்ற கொள்கை விவகாரங்களுக்கு தற்போது பதில் அளிக்க முடியாது என்றும், மின்வெட்டை முழுமையாகத் தீர்ப்பதில் முழு கவனம் செலுத்தப்பட்டு வருவதாகவும் தெரிவித்தார்.

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleஇந்திய கிரிக்கெட் அணியின் எதிர்காலத்துக்கு புதிய வலுச்சேர்க்கை: மெண்டராக வருவாரா தோனி?
    Next Article ரஜினியின் பெயர், படங்களை அரசியலில் பயன்படுத்தக்கூடாது..!! ரசிகர் மன்றம் அதிரடி அறிக்கை..!!
    editor5

    Related Posts

    AI, கிளவுட் சேவை: இந்தியாவில் முதலீட்டை அதிகரிக்கும் அமேசான்

    July 14, 2026

    பிளாஸ்டிக் பாக்கெட்டுக்கு பதில் தானியங்கி பால் விற்பனை: ஆவின் புதிய திட்டம்

    July 14, 2026

    கரூர் கோயில் நிலங்கள் விவகாரம்: விவரங்களை தாக்கல் செய்ய உத்தரவு

    July 14, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    AI, கிளவுட் சேவை: இந்தியாவில் முதலீட்டை அதிகரிக்கும் அமேசான்

    பிளாஸ்டிக் பாக்கெட்டுக்கு பதில் தானியங்கி பால் விற்பனை: ஆவின் புதிய திட்டம்

    கரூர் கோயில் நிலங்கள் விவகாரம்: விவரங்களை தாக்கல் செய்ய உத்தரவு

    ரூ.100 கோடி பழனி கோவில் நிலம் மோசடி பதிவு? – வன்மத்துடன் அவதூறு பரப்புகின்றனர்– அமைச்சர் ரமேஷ்

    பழநி கோயிலுக்கு சொந்தமான ரூ.100கோடி நிலம் மோசடி வழக்கு..! அமைச்சரை தொடர்புபடுத்த வேண்டாம்..!

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.