நடிகர் கமல்ஹாசனின் தயாரிப்பில் நடிகர் ரஜினிகாந்த் நடிக்கும் தலைவர் 173 படத்தின் பெயர் அறிமுக விழா சென்னையில் நடைபெற்றது.
அஸ்வத் மாரிமுத்து இயக்கும் இந்தப் படத்துக்கு தர்மன் எனப் பெயரிடப்பட்டுள்ளது.
நிகழ்ச்சியில் நடிகர் ரஜினிகாந்த் பேசுகையில்,
பேச அழைக்கிறோம்னு சொன்னாலே தயக்கமா இருக்கு; ஏன்னா நான் பேசுனாலே ப்ராப்ளம்; ஒண்ணு எனக்கு ப்ராப்ளம், இல்ல மத்தவங்களுக்கு ப்ராப்ளம்.
ஏதாவது பேசிட்டே இருப்பாங்க; ஏதாவது கிளப்பிக்கிட்டே இருப்பாங்க. நான் சும்மா இருந்தாலும், பேசினாலும் ஏதாவது கலாட்டா செஞ்சிக்கிட்டே இருப்பாங்க என நடப்புச் சூழலை சுட்டிக்காட்டினார்.
ரொம்பநாள் கழிச்சி கத்துக்கிட்டேன்…. நம்மளப் பிடிக்காதவங்களுக்கு நாம என்ன செஞ்சாலும் என்ன பண்ணாலும் பிடிக்காது. நம்மளப் பிடிச்சவங்களுக்கு நாம என்ன செஞ்சாலும், எது பண்ணினாலும் பிடிக்கும்னு நெனைக்கிறது முட்டாள்தனம். அதனால ஜாக்கிரதையா இருக்கணும் தன அனுபவத்தையும் பகிர்ந்து கொண்டார்.
இந்தப் படத்துக்கு கே.எஸ்.ரவிக்குமார், சுந்தர்.சி, சி.பி.சக்கரவர்த்தி தொடர்ந்து இப்போ அஸ்வத் மாரிமுத்து இந்தப் படத்துக்குள் வந்தாரு என படத்தின் நிகழ்வுகள் குறித்துப் பேசியவர்,
படத்தோட கதையக் கேக்கணும்னு வலுக்கட்டாயமா சொன்னபிறகுதான் கமல் கதையைக் கேட்டாரு எனக் கூறியதோடு, தனது பழைய நினைவுகளையும் அசைபோட்டார்.
அப்போது இளமை ஊஞ்சலாடுகிறது படத்தில் தான் நடிக்க கமல்ஹாசனின் அழைப்புதான் காரணம் எனக் கூறி படப்பிடிப்பின்போது நடந்த சில சுவாரஷ்ய நிகழ்வுகளைக் குறிப்பிட்டார்.
இந்தப் படம் ரொம்ப நல்லா வரும் என நம்பிக்கை தெரிவித்தவர், இன்னும் பல படங்களை கமல்ஹாசன் தயாரிக்கவேண்டும் எனக் குறிப்பிட்டார்.
