இந்தியாவில் நடைபெற உள்ள மாநிலங்களவை தேர்தலில் தமிழ்நாட்டில் காங்கிரஸ் வேட்பாளராக பிரவீன் சக்கரவர்த்தி வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார்.
இந்தியாவில் தமிழ்நாடு உள்பட 10 மாநிலங்களில் காலியாக உள்ள 24 மாநிலங்களவை உறுப்பினர்களுக்கான தேர்தல் ஜூன் 18ஆம் தேதி நடைபெறுகிறது.
தமிழ்நாட்டில் அதிமுக மாநிலங்களவை உறுப்பினர் சி.வி.சண்முகம் ராஜினாமா செய்த நிலையில், அந்த இடத்துக்கான இடைத்தேர்தல் நடைபெறுகிறது.
ஆளும் கட்சியான தவெக சார்பில் வேட்பாளர் நிறுத்தப்படலாம் எனத் தகவல்கள் தெரிவிக்கப்பட்ட நிலையில் அதிரடி திருப்பமாக, தனக்கு ஆட்சி அமைக்க ஆதரவளித்த காங்கிரஸ் கட்சிக்கு மாநிலங்களவை உறுப்பினர் இடத்தை வழங்கி தவெக இன்ப அதிர்ச்சி கொடுத்தது.
தற்போது காங்கிரஸ் தரப்பில் வெளியிடப்பட்டுள்ள அதிர்ச்சியில் தமிழ்நாடு வேட்பாளராக பிரவீன் சக்கரவரத்தி அறிவிக்கப்பட்டுள்ளார். இதேபோல் கர்நாடகாவில் மல்லிகார்ஜுன கார்கே, பவன் கேரா, மன்சூர் அலிகான் ஆகியோரும், மத்தியப் பிரதேசத்தில் மீனாட்சி நடராஜன், ராஜஸ்தானில் நீரஜ் டாங்கி, ஜார்க்கண்டில் பிரணவ் ஜா ஆகியோரும் வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டுள்ளனர்.

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version