Close Menu
    What's Hot

    யானைகளுக்கு சிகிச்சை.. தனியார் தொண்டு நிறுவனங்களுக்கு NO சொன்ன சென்னை ஐகோர்ட்..!!

    3வது நாடக உருவெடுத்துள்ள இந்தியா..! பிரதமர் மோடி பெருமிதம்.!

    வரலாற்றுச் சிறப்புமிக்க மாற்றம்.. இந்தியாவில் வருகிறதா பிளாஸ்டிக் கரன்சி? டெண்டர் கோரிய RBI..!!

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • உலகம்
    • சிறப்புக் கட்டுரைகள்
    • வர்த்தகம்
    • More
      • டெக்னாலஜி
      • LIFESTYLE
      • koilgal
    TN Talks
    Home»Featured»முதியோர், மாற்றுத்திறனாளிகளே முன்னுரிமை..!! வீடு தேடி வரும் ரேஷன் பொருட்கள்..!!
    Featured

    முதியோர், மாற்றுத்திறனாளிகளே முன்னுரிமை..!! வீடு தேடி வரும் ரேஷன் பொருட்கள்..!!

    editor5By editor5June 1, 2026No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    image 17
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    தாயுமானவர் திட்டத்தின் கீழ் பயன்பெறும் முதியோர் மற்றும் மாற்றுதிறனாளிகள் இத்திட்டத்தை தவறாமல் பயன்படுத்திகொள்ள வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    முதலமைச்சர் தாயுமானவர் திட்டத்தின் கீழ் 65 வயதுக்கு மேற்பட்ட முதியோர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளின் வீடுகளுக்கே நியாயவிலைப் பொருட்களை வழங்கும் சிறப்பு ஏற்பாடு வரும் ஜூன் 2 மற்றும் 3 ஆகிய தேதிகளில் சென்னையில் செயல்படுத்தப்பட உள்ளது. கூட்டுறவுச் சங்கங்கள் கூடுதல் பதிவாளர் (சென்னை மண்டலம்) பாபு இதுதொடர்பாக வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், முதலமைச்சரின் தாயுமானவர் திட்டம் மூலம் முதியோர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளின் நலனை கருத்தில் கொண்டு, அவர்களது இல்லங்களுக்கே அத்தியாவசியப் பொருட்களை வழங்கும் பணி தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருவதாகத் தெரிவித்தார்.

    இதன் ஒரு பகுதியாக, ஜூன் மாதம் 2 மற்றும் 3 ஆகிய இரு நாட்களில் சென்னை மாநகரின் 18 மண்டலங்களில் 990 நியாயவிலைக் கடைகளின் விற்பனையாளர்கள் நேரடியாக பயனாளிகளின் வீடுகளுக்குச் சென்று பொது விநியோகத் திட்டத்தின் கீழ் வழங்கப்படும் அரிசி, சர்க்கரை, மண்ணெண்ணெய் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களை விநியோகம் செய்ய உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அண்ணாநகர், ஆலந்தூர், பெருங்குடி, சோழிங்கநல்லூர், தேனாம்பேட்டை, அடையாறு, திருவொற்றியூர், மணலி, மாதவரம், தண்டையார்பேட்டை, ராயபுரம், திரு.வி.க. நகர், அம்பத்தூர், கோடம்பாக்கம், வளசரவாக்கம், பல்லாவரம், குரேம்பேட்டை மற்றும் தாம்பரம் ஆகிய 18 மண்டலங்களில் இந்த சிறப்பு விநியோகப் பணி தீவிரப்படுத்தப்படும்.

    இத்திட்டத்தின் மூலம் பயன்பெறும் முதியோர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் தங்களுக்கு உரிய பொருட்களை தவறாமல் பெற்றுக்கொள்ள வேண்டும் என கூட்டுறவுத் துறை அதிகாரிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர். இந்த ஏற்பாடு மூலம் பயனாளிகளுக்கு பயணச் சிரமம் தவிர்க்கப்பட்டு, உரிய நேரத்தில் தரமான பொருட்கள் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. தாயுமானவர் திட்டம் என்பது முதியோர் மற்றும் மாற்றுத்திறனாளிகளின் அன்றாட வாழ்க்கையை எளிதாக்கும் வகையில் அரசு கொண்டு வந்த முக்கிய திட்டமாகும். இதன் கீழ் வழங்கப்படும் பொருட்கள் அரசு நிர்ணயித்த நியாய விலையிலேயே வழங்கப்படும்.

    சென்னை மண்டல கூட்டுறவுத் துறை அதிகாரிகள் இந்த இரு நாட்களிலும் விநியோகப் பணியை கண்காணித்து, எந்தவிதமான குறைபாடும் இல்லாமல் பணிகள் முடிக்கப்படுவதை உறுதி செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது. பயனாளிகள் தங்கள் குடும்ப அட்டை மற்றும் அடையாள அட்டைகளை தயாராக வைத்திருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்த சிறப்பு விநியோகத்தின் மூலம் ஆயிரக்கணக்கான முதியோர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் பயனடையவுள்ளனர்.

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleதவெக கொள்கை தலைவர் அஞ்சலை அம்மாள் பிறந்தநாள்!. திருச்சியில் முதல்வர் விஜய் மரியாதை!
    Next Article 12-ஆம் வகுப்பு விடைத்தாள் கசிவு: தொழில்நுட்பக் கோளாறை ஒப்புக்கொண்ட சிபிஎஸ்இ!
    editor5

    Related Posts

    யானைகளுக்கு சிகிச்சை.. தனியார் தொண்டு நிறுவனங்களுக்கு NO சொன்ன சென்னை ஐகோர்ட்..!!

    July 18, 2026

    3வது நாடக உருவெடுத்துள்ள இந்தியா..! பிரதமர் மோடி பெருமிதம்.!

    July 18, 2026

    வரலாற்றுச் சிறப்புமிக்க மாற்றம்.. இந்தியாவில் வருகிறதா பிளாஸ்டிக் கரன்சி? டெண்டர் கோரிய RBI..!!

    July 18, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    யானைகளுக்கு சிகிச்சை.. தனியார் தொண்டு நிறுவனங்களுக்கு NO சொன்ன சென்னை ஐகோர்ட்..!!

    3வது நாடக உருவெடுத்துள்ள இந்தியா..! பிரதமர் மோடி பெருமிதம்.!

    வரலாற்றுச் சிறப்புமிக்க மாற்றம்.. இந்தியாவில் வருகிறதா பிளாஸ்டிக் கரன்சி? டெண்டர் கோரிய RBI..!!

    மீண்டும் திறக்கப்படும் அம்மா மினி கிளினிக்குகள்..!! அமைச்சர் அருண்ராஜ் சொன்ன குட் நியூஸ்..!!

    போராட்டமின்றி மதுக்கடைகளை அகற்றிய முதல் அரசு தவெக தான்.. அமைச்சர் செங்கோட்டையன் பெருமிதம்..!!

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.