Close Menu
    What's Hot

    ஈரான் மீது 7-வது நாளாக தொடர்ந்து அமெரிக்கா தாக்குதல்: மத்திய கிழக்கில் போர் பதற்றம் தீவிரம்!

    நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத்தொடர்: நாளை அனைத்துக் கட்சிக் கூட்டம்!

    தேர்வுத்தாள் கசிவு விவகாரம்.. 60%க்கும் மேல் பாஜக ஆளும் மாநிலங்களில் தான்..!! மாணிக்கம் தாகூர் விளாசல்..!!

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • உலகம்
    • சிறப்புக் கட்டுரைகள்
    • வர்த்தகம்
    • More
      • டெக்னாலஜி
      • LIFESTYLE
      • koilgal
    TN Talks
    Home»இந்தியா»12-ஆம் வகுப்பு விடைத்தாள் கசிவு: தொழில்நுட்பக் கோளாறை ஒப்புக்கொண்ட சிபிஎஸ்இ!
    இந்தியா

    12-ஆம் வகுப்பு விடைத்தாள் கசிவு: தொழில்நுட்பக் கோளாறை ஒப்புக்கொண்ட சிபிஎஸ்இ!

    Editor web1By Editor web1June 1, 2026No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    CBSE students
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    12-ஆம் வகுப்பு மாணவர்களின் விடைத்தாள்கள் கசிந்ததாக எழுந்த குற்றச்சாட்டுகள் தொடர்பாக, தேர்வுத் தாள்களை ஆன்லைனில் மதிப்பீடு செய்ய பயன்படுத்தப்படும் OSM (On-Screen Marking) அமைப்பில் தொழில்நுட்ப மற்றும் பாதுகாப்பு குறைபாடுகள் இருந்ததை சிபிஎஸ்இ (CBSE) வாரியம் ஒப்புக்கொண்டுள்ளது.

    சிபிஎஸ்இ பயன்படுத்தி வந்த OSM இணையதளத்தில் தரவு பாதுகாப்பு தொடர்பான பலவீனங்கள் இருப்பதாக குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டிருந்தன. குறிப்பாக, ‘அமேசான் கிளவுட் ஸ்டோரேஜ்’ தளத்தில் பாதுகாப்பு குறைபாடு இருப்பதாக 19 வயதான ஹேக்கர் நிசர்கா அதிகாரி ஆதாரங்களுடன் சுட்டிக்காட்டியிருந்தார்.

    இதற்கிடையில், டெல்லியைச் சேர்ந்த வேதாந்தா என்ற மாணவர், தனது மதிப்பெண்களில் சந்தேகம் எழுந்ததால் விடைத்தாளின் நகலை பெற்றபோது, அதிலிருந்த கையெழுத்து தன்னுடையது அல்ல என்றும், அது தனது விடைத்தாளே அல்ல என்றும் புகார் தெரிவித்தார். இந்த விவகாரம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், சிபிஎஸ்இ நடத்திய உள்விசாரணையில் OSM அமைப்பில் சில குளறுபடிகள் இருந்தது கண்டறியப்பட்டது.

    இதையடுத்து, OSM அமைப்பின் பாதுகாப்பை மேலும் வலுப்படுத்துவதற்காக பல்வேறு அரசு அமைப்புகள் மற்றும் ஐஐடி சைபர் பாதுகாப்பு நிபுணர்கள் அடங்கிய குழு தீவிரமாக பணியாற்றி வருவதாக சிபிஎஸ்இ தெரிவித்துள்ளது.

    மேலும், இதுவரை கண்டறியப்பட்ட அனைத்து தொழில்நுட்ப மற்றும் பாதுகாப்பு குறைபாடுகளும் சரிசெய்யப்பட்டுள்ளதாகவும், எதிர்காலத்தில் இதுபோன்ற பிரச்சினைகள் ஏற்படாத வகையில் அமைப்பை முழுமையாக மேம்படுத்தும் நடவடிக்கைகள் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் வாரியம் விளக்கம் அளித்துள்ளது.

    =============

     

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleமுதியோர், மாற்றுத்திறனாளிகளே முன்னுரிமை..!! வீடு தேடி வரும் ரேஷன் பொருட்கள்..!!
    Next Article டிஜிட்டல் பணப் பரிவர்த்தனை: பாதுகாப்பை உறுதி செய்யும் புதிய UPI அம்சம் அறிமுகம்..!!
    Editor web1
    • Website

    Related Posts

    நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத்தொடர்: நாளை அனைத்துக் கட்சிக் கூட்டம்!

    July 18, 2026

    இந்தியாவின் முதல் தனியார் ராக்கெட்..!! வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது விக்ரம்-1..!!

    July 18, 2026

    மோசமாகும் உடல்நிலை..!! உண்ணாவிரதம் இருந்த வாங்சுக் வலுக்கட்டாயமாக ஹாஸ்பிடலில் அட்மிட்..!!

    July 18, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    ஈரான் மீது 7-வது நாளாக தொடர்ந்து அமெரிக்கா தாக்குதல்: மத்திய கிழக்கில் போர் பதற்றம் தீவிரம்!

    நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத்தொடர்: நாளை அனைத்துக் கட்சிக் கூட்டம்!

    தேர்வுத்தாள் கசிவு விவகாரம்.. 60%க்கும் மேல் பாஜக ஆளும் மாநிலங்களில் தான்..!! மாணிக்கம் தாகூர் விளாசல்..!!

    இந்தியாவின் முதல் தனியார் ராக்கெட்..!! வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது விக்ரம்-1..!!

    புதுக்கோட்டை: மாநகராட்சி குளங்களில் 15,000 மரக்கன்றுகள் நடும் பணி தொடக்கம்!

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.