ஒன்றிய அரசு சிபிஎஸ்இ பள்ளிகளில் புகுத்தியிருக்கும் மும்மொழித் திட்டம் தற்காலிகமாகத் திரும்பப் பெறப்பட்டதுபோன்ற ஒரு தோற்றம் சில ஊடகங்களின் செய்திகள் மூலம் உருவாகியிருக்கலாம். மும்மொழித் திட்டம் திரும்பப்பெறப்படவில்லை. சிபிஎஸ்இ  அதைத் தொடர்ந்து செயல்படுத்துவதாகவே அறிவித்துள்ளது என விசிகஎம்.பி ரவிக்குமார் தெரிவித்துள்ளார்.

தமிழ்நாட்டில் அதற்கு எதிர்ப்பு எழுந்துள்ளதால் தமிழ்நாட்டு மாணவர்களைக் குழப்புவதுபோல ஒரு அறிவிப்பை அது வெளியிட்டுள்ளதாகவும் அவர் சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார்.

2026-27 ஆம் கல்வியாண்டில் பத்தாம் வகுப்பில் பயிலும் மாணவர்களுக்கு எந்த மாற்றமும் இருக்காது என்றும், அவர்கள் தொடர்ந்து இரண்டு மொழிகளைக் கொண்ட பழைய முறையையே பின்பற்றுவார்கள் என்றும் மீண்டும் வலியுறுத்தப்படுகிறது.

* இப்பிரிவைச் சேர்ந்த மாணவர்கள் மூன்றாவது மொழியைப் பயில வேண்டிய அவசியமில்லை.” என்றும் கூறியுள்ள சிபிஎஸ்இ ஒன்பதாம் வகுப்பில் தற்போது பயிலும் மாணவர்கள் 3 மொழியைப் படிக்க வேண்டும் எனக் கூறியுள்ளது.

மூன்றாம் மொழி (R3) உங்கள் பள்ளியால் நடத்தப்படும் பள்ளி அளவிலான அக மதிப்பீட்டின் (internal assessment) மூலமாக மட்டுமே மதிப்பிடப்படும்.

* இப்பிரிவு மாணவர்கள் 2027-28 கல்வியாண்டில் பத்தாம் வகுப்பிற்குச் செல்லும்போது, ​​இந்த மூன்றாம் மொழிக்கு CBSE வாரியத் தேர்வுகள் எதுவும் இருக்காது” எனக் கூறியுள்ளது.

ஆனால், மற்ற வகுப்புகளில் படிக்கும் மாணவர்களுக்கு முன்பு அறிவித்தவாறு ஆங்கிலம் அல்லாமல் இரண்டு இந்திய மொழிகள் கற்பிக்கப்படும். அதாவது இந்தியோ சமஸ்கிருதமோ கட்டாயம்.

மும்மொழித் திட்டம் என்ற இந்தி/ சமஸ்கிருதத் திணிப்பை ஏற்றுக்கொள்ள மாட்டோம் எனத் தமிழ்நாடு அரசு தொடர்ந்து கூறிவரும் நிலையில் அந்த எதிர்ப்பைக் கூர் மழுங்கச் செய்வதற்கு ஒன்றிய அரசு செய்யும் தந்திரம்தான் இந்த அறிவிப்பு.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version