முதலமைச்சர் ச.ஜோசப் விஜய் தன்னைப் பற்றியும் ஆட்சி பற்றியும் வரும் செய்திகளைப் படித்து உண்மையை உணரவேண்டும் என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தியுள்ளார்.

திமுக எம்.பி கலாநிதி வீராசாமி இல்லத் திருமண விழா சென்னை வானகரத்தில் நடைபெற்றது. விழாவில் திமுக தலைவரும் முன்னாள் முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு திருமணத்தை நடத்தி வைத்தார். பின்னர் மணமக்களை வாழ்த்திப் பேசினார்.

ஆற்றலுக்கும் கொள்கை பிடிப்புக்கும் இலக்கணமாக விளங்கிக் கொண்டிருக்கக் கூடிய ஆற்காட்டார் இல்ல திருமண விழாவில் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தி உள்ளேன்.

 இன்றளவும் இந்த இயக்கத்திற்கு விசுவாசமாக துணையாக ஆலோசகராக எங்களைப் போன்றவர்களுக்கு வழிகாட்டியாக அண்ணன் ஆற்காட்டார் விளங்கிக் கொண்டிருக்கிறார். துவக்க காலத்தில் மின் துறையில் ஊழியராக பணியாற்றி அதன் பிறகு மின்சார துறை அமைச்சராக மாறினார்.

திமுக வளர்ச்சிக்கு தலைமைக் கழகம் என்ன பணியிட்டாலும் அதனை சிறப்பாக செய்யக்கூடிய செயல் வீரராக ஆற்காட்டாரின் மகன் கலாநிதி வீரராசாமி உள்ளார். மக்கள் சேவகனாக வடசென்னை நாடாளுமன்ற காலநிதி வீராசாமி உறுப்பினர் விளங்கி கொண்டிருக்கிறார்.

1976 ஆம் ஆண்டு மிசா சட்டத்தில் கைது செய்யப்பட்டு ஓராண்டு சிறையில் இருந்தபொழுது ஆற்காட்டாரும் எங்களுடன் சிறையில் இருந்தார்.. நாங்கள் சிறையில் தெம்போடு திராணியாக இருந்ததற்கு காரணம் ஆற்காட்டார். வைரம் பாய்ந்த தொண்டர் ஆற்காட்டார் என்று கலைஞர் சொல்லுவார்

ஒரு மாநிலக் கட்சி எப்படி இருக்க வேண்டும் என்பதற்கு திமுக விளங்கிக் கொண்டிருக்கிறது. ஆட்சியில் இருந்தாலும் இல்லாவிட்டாலும் மக்களுக்காக பாடுபடக்கூடிய கட்சி திமுக.

இன்று எத்தனையோ பேர் திமுகவுக்கு வந்து கொண்டிருக்கிறார்கள் என கூறினார்.

இன்று தமிழகத்தில் முதலமைச்சர் கோட் போட்டு வருகிறார், ஷர்ட் போட்டு உள்ளார், பட்டு வேட்டு சட்டை கட்டி உள்ளார், செஸ் விளையாடுகிறார் என்று தான் செய்திகள் எல்லாம் வருகிறது. நாட்டில் அக்கிரமங்கள் நடந்து கொண்டுள்ளது.

முதலமைச்சரிடம் ஒன்று கூறுகிறேன். உங்களைப் பற்றி உங்கள் ஆட்சியைப் பற்றி வரக்கூடிய செய்தியை படியுங்கள். படித்து உண்மையை கண்டுபிடிங்கள் நடவடிக்கை எடுங்கள் என அறிவுறுத்தினார்.

முன்னதாக உரையாற்றிய எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின்,

ஐயா ஆற்காட்டார் வீட்டில் குடும்ப உறுப்பினராக உங்கள் அனைவரையும் வரவேற்கிறேன். கலைஞர் நிழலாக வலம் வந்தவர் ஆற்காட்டார், கருணாநிதியுடன் அதிக நேரம் பேசக்கூடியவர்.

தற்போது எந்த கட்சி ஆட்சிக்கு வருகிறதோ அந்த கட்சியின் கரை வேட்டிகளை கட்டி சுத்துபவர்களை தற்போது அதிகம் பார்த்து வருகிறோம்.. இந்த ஆட்சி எதைக் கொள்முதல் செய்கிறதோ இல்லையோ அடுத்த கட்சி ஆட்களையும் அடுத்த கட்சியின் சட்டமன்ற உறுப்பினர்களையும் கொள்முதல் செய்து வருகிறது என்றார்.

சோபா மாடல் ஆட்சிக்கு வாக்களித்தோமே என்று மக்கள் வருத்தப்படுகிறார்கள்…சோபா மாடல் ஆட்சியை வீட்டுக்கு அனுப்ப வேண்டிய நாள் வெகு தொலைவில் இல்லை… மீண்டும் திமுக தலைவர் தலைமையில் ஆட்சி அமையும் என கூறினார்.

தொடர்ந்து பேசிய திமுக துணை பொது செயலாளர் கனிமொழி

தன்னுடைய வாழ்நாள் முழுவதும், கொண்ட தலைவனும் கொள்கையும் ஒன்றே என்று இருக்கக்கூடிய குடும்பத்தில் நடைபெறும் திருமணத்தில் கலந்து கொள்வதில் மகிழ்ச்சி. காலை முதல் மாலை வரை கலைஞர் உடன் இருக்கக்கூடிய ஒருவர் ஆற்காட்டார்.

திமுகவில் உள்ள கடைக்கோடி தொண்டர் வரை ஆற்காட்டாரை அணுகலாம். நான் இருக்கிறேன் என்று அன்பான வார்த்தைகளோடு தொண்டர்களை அரவணைத்தவர் ஆற்காட்டார். நம் இயக்கம் மட்டுமல்ல மாற்று இயக்கத்தைச் சார்ந்தவர்களிடமும் அன்பைப் பெற்றவர் கலாநிதி வீராசாமி.

இன்று பல அரசியல்வாதிகள் வாய் திறந்து பேசுவதே கிடையாது…பேசினாலும் பேசாமல் இருந்திருக்கலாம் என்று நினைத்த நேரங்களும் உள்ளது என கூறினார்.

திருமணவிழாவில் முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் பேசுகையில்,  இதே திருமண மண்டபத்தில்தான் நான் அதிமுக பொதுக்குழுவில் கலந்து கொண்ட நிகழ்வின் பொழுது என் மீது தண்ணீர் பாட்டில் கொண்டு வீசி வெளியேற்றினார்கள். இதே மண்டபத்தில் தான் அன்று என் சிரிப்பு தொலைந்து போனது, ஆனால் அந்த சிரிப்பை மீட்டு தந்தவர் திமுக தலைவர் என்றார். எங்கிருந்து நான் அரசியலை தொடங்கினேனோ அங்கேயே வந்து மீண்டும் இணைந்து இருக்கின்ற மகிழ்ச்சி எனக்கு இருக்கிறது.

சட்டமன்ற தேர்தலில் ஏதோ ஒரு பிம்பத்தை பார்த்து வாக்களித்த மக்கள் இன்று ஒரு மாத காலத்திலேயே மிகவும் பாதிக்கப்பட்டு விட்டார்கள். இன்னும் நாலே முக்கால் வருஷத்தை எப்படி நாம் கழிக்கப் போகிறோம் என்று இருக்கிறார்கள். மீண்டும் தமிழகத்திற்கு விடியல் வரவேண்டும் என்றால் திமுக தலைவர் ஆட்சி அமைக்க வேண்டும் என்றார்.

அனைவரையும் அரவணைப்போடு அழைத்துச் செல்லக்கூடிய ஒரே தலைவர் நம்முடைய தலைவர்… நாடே திமுக தலைவரை வியந்து பாராட்டி வருகிறது. கூடிய விரைவில் பொற்காலம் மலரும் எனக் கூறினார்.

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version