தற்போதைய அரசியல் சூழ்நிலையில், அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் சிலர் அக்கட்சியில் இருந்து விலகி தவெகவில் ஐக்கியமாகி வரும்  நிலையில், இதுகுறித்து முன்னாள் சபாநாயகர் அப்பாவு அடுக்கடுக்கான கேள்விகளை முன்வைத்துள்ளார்.

இதுதொடர்பாக அவரது எக்ஸ் பக்கத்தில், அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் தொடர்ந்து தங்களது பதவியை ராஜினாமா செய்து விட்டு ஆளுங்கட்சியான த.வெ.க-வில் இணைவது தற்போது ஆட்சியில் இருக்கும் த.வெ.க அரசுக்கு ஆதரவு அளித்து வருகின்ற, காங்கிரஸ், விடுதலைச் சிறுத்தைகள், கம்யூனிஸ்டுகள், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் ஆகிய கட்சிகளின் மீதுள்ள நம்பகத்தன்மையின்மையா? அல்லது அவர்களது தொடர்பை துண்டித்து விட்டு ஒன்றிய அரசிடம் தற்போது வைத்திருக்கின்ற மறைமுக உறவை வெளிப்படையாக உறுதிப்படுத்தப்படுவதற்காகவா?

அதிமுகவின் 25 MLA-க்கள் இந்த அரசை ஆதரித்து வாக்களிப்பதற்காக அவர்களில் 8 பேர்களுக்கு அமைச்சர் பதவி வழங்கப்படும் என்று உறுதியளித்ததாக நம்பியவர்களுக்கு கொடுத்த வாக்குறுதி என்ன ஆனது? MLA பதவியை ராஜினாமா செய்து கொண்டு இருப்பது அமைச்சர் பதவிக்காகவா? எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்தவர்களுக்கு அமைச்சர் பதவி வழங்கலாமே ( ஆறு மாதத்திற்குள் தேர்தலில் நின்று MLA -வாக தேர்ந்தெடுக்கப்பட்டால் போதுமானதே ) தவெக அரசு அதை நிறைவேற்றுமா ? அல்லது 25 MLA-க்களையும் தொடர்ந்து ஏமாற்றுமா? என்று கேள்வி எழுப்பியுள்ளார்,.

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version