தமிழ்நாட்டில் ஒரு சில மாவட்டங்களில் அடுத்த 2 நாட்கள் அதி கனமழைக்கான சிவப்பு நிற எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் இம்மாதம் தொடக்கத்தில் தொடங்கிய அக்னி வெயிலானது, வரும் 28-ம் தேதி வரை தொடர்கிறது. ஆனால் தமிழ்நாட்டில் கடந்த சில தினங்களாக கோடை வெயிலின் சூட்டை தணிக்கும் விதமாக அவ்வப்போது மழை பெய்து வருகிறது. வெயிலின் தாக்கம் மெல்ல, மெல்ல குறைந்து தற்போது பருவமழையின் தாக்கம் தொடங்கியுள்ளது. வழக்கமாக அடுத்த மாதம் தொடங்கும் பருவமழையானது இம்மாத இறுதி அல்லது ஜூன் தொடக்கத்தில் உருவாகும் என வானிலை ஆய்வு மையமும் தெரிவித்திருந்தது.

அதன்படி தமிழ்நாட்டின் டெல்டா மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை பெய்து வருகிறது. இந்தநிலையில் மே 25,26 ஆகிய 2 நாட்கள் ஒரு சில மாவட்டங்களில் அதி கனமழைக்கு வாய்ப்பு உள்ளதால், சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் நாளை ஒரு சில மாவட்டங்களில் மிக கனமழைக்கு வாய்ப்பு என்பதால் ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

மேலும் தமிழகத்தில் இன்று (23.05.2025) முதல் அடுத்த 5 நாட்கள் கனமழைக்கு வாய்ப்புள்ளதாகவும், கேரளா, கர்நாடகாவிலும் அதி கனமழைக்கான சிவப்பு நிற எச்சரிக்கையும் விடுத்து இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version