கோவையில் அண்ணாமலைக்கு ஆதரவாக ரஜினி ரசிகர் நற்பணி மன்றத்தினர் போஸ்டர்களை ஒட்டி உள்ளது பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

பாஜக முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை நேற்று டெல்லி சென்றார். அப்போது அவர்  பாஜகவில் இருந்து விலகுவதாக பாஜக தேசியத் தலைவர் நிதின் நபினை சந்தித்து கட்சியில் இருந்து விலகுவதாக கடிதம் வழங்கினார். பின்னர் உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்தித்து விளக்கம் அளித்ததாகத் தகவல்கள் வெளியாகின.

அண்ணாமலையின் டெல்லி பயணத்தைத் தொடர்ந்து, பாஜக தமிழகத் தலைவர் நயினார் நாகேந்திரனையும் டெல்லிக்கு வரும்படி மேலிடம் அழைப்பு விடுத்ததையடுத்து அவரும் டெல்லி சென்றிருக்கிறார். இதனால் தமிழ்நாடு பாஜகவில் ஏதேனும் மாற்றம் நிகழுமா என்னும் ஐயம் எழுந்துள்ளது.

நாளை (ஜூன் 4ம் தேதி) அண்ணாமலையின் பிறந்த நாள் அன்று புதிய கட்சி துவங்க இருப்பதாகவும் அண்ணாமலையின் ஆதரவாளர்கள் பலரும் தெரிவித்து வரும் சூழலில் பல்வேறு மாவட்டங்களில் அதனை உறுதி செய்யும் வகையில் அண்ணாமலையின் ஆதரவாளர்கள் போஸ்டர்களை ஒட்டி வருகின்றனர் சமூக வலைதளங்களிலும் கருத்துக்கள் பகிரப்பட்டு வருகிறது.

கோவை மாவட்டத்திலும் முன்னாள் பாஜக மாவட்ட தலைவர் பாலாஜி உத்தம ராமசாமி தலைவா தரணி ஆள வா என்று குறிப்பிட்டு போஸ்டர் ஒட்டி இருந்தார்.

அதேசமயம் நடிகர் ரஜினிகாந்த் அண்ணாமலைக்கு ஆதரவு அளிக்கும் வகையிலும் ரஜினி ரசிகர்கள் ஆங்காங்கே போஸ்டர்களை ஒட்டி சமூக வலைத்தளங்களில் கருத்துக்களையும் பதிவிட்டு வருகின்றனர்.

கோவை மாவட்ட தலைமை ரஜினிகாந்த் ரசிகர் நற்பணி மன்றம் சார்பில் நடிகர் ரஜினிகாந்த் மற்றும் அண்ணாமலையின் புகைப்படங்களுடன் “தலைவா ஆணையிடு! அண்ணாமலை மகுடம் சூட…” என குறிப்பிட்டு போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளது.

கோவை மாநகரில் உக்கடம் கோட்டைமேடு உள்ளிட்ட பகுதிகளில் இந்த போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளன.

நடிகர் ரஜினி நடித்த அண்ணாமலை படத்துக்கு போஸ்டர் ஒட்டிய ரசிகர்கள், இன்று அண்ணாமலைக்காக போஸ்டர் ஓட்டியிருப்பது பலரையும் புருவம் உயர்த்த வைத்துள்ளது.

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version