Close Menu
    What's Hot

    இந்தியப் பொருட்களுக்கு அமெரிக்கா 12.5% கூடுதல் சுங்கவரி: முடிவை மறுபரிசீலனை செய்ய வலியுறுத்தல்

    டென்னிஸ் ஜாம்பவான் ரோஜர் பெடரரைச் சந்தித்த கிரிக்கெட் கடவுள் சச்சின்!

    இந்தியா-நியூசிலாந்து இருதரப்பு வர்த்தகம் 2030-க்குள் இரட்டிப்பாகும்: பிரதமர் மோடி நம்பிக்கை!

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • உலகம்
    • சிறப்புக் கட்டுரைகள்
    • வர்த்தகம்
    • More
      • டெக்னாலஜி
      • LIFESTYLE
      • koilgal
    TN Talks
    Home»Featured»பழனி கோயிலின் ரூ.100 கோடி சொத்து பத்திரப்பதிவு ரத்து? அதிகாரிகள் மீது விசாரணை தீவிரம்!
    Featured

    பழனி கோயிலின் ரூ.100 கோடி சொத்து பத்திரப்பதிவு ரத்து? அதிகாரிகள் மீது விசாரணை தீவிரம்!

    editor5By editor5July 11, 2026No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    image 42
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    திண்டுக்கல் மாவட்டம் பழனி அடிவாரப் பகுதியில் உள்ள தண்டபாணி சுவாமிகள் மடத்திற்கு சொந்தமான 1.4 ஏக்கர் நிலம், சுமார் 100 கோடி ரூபாய் மதிப்புடையது எனக் கூறப்படும் நிலையில், இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் ரமேஷின் உத்தரவின் பெயரால் சட்டவிரோதமாக தனிநபர்களுக்கு பத்திரப் பதிவு செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதை எதிர்த்து பழனி கோயில் நிர்வாகம் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கில், பதிவை ரத்து செய்யவும், சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மற்றும் தனிநபர்கள் மீது நடவடிக்கை எடுக்கவும் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.

    பழனி தண்டாயுதபாணி கோயில் நிர்வாகத்தால் கையகப்படுத்தப்பட்ட இந்த 1.4 ஏக்கர் நிலம், பல ஆண்டுகளாக பக்தர்களின் இலவச வாகன நிறுத்துமிடமாகப் பயன்படுத்தப்பட்டு வருகிறது. கோயில் நிர்வாகம் இந்த நிலத்தை பதிவு செய்யக்கூடாது என மூன்று முறை எழுத்துப்பூர்வமாக எச்சரித்திருந்தும், சென்னை உயர் நீதிமன்றம் மற்றும் உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்புகளை முழுமையாகப் புறக்கணித்து, கடந்த ஜூலை 6-ம் தேதி சிறப்புப் பணியில் இருந்த இணைப் பதிவாளர் (கூடுதல் பொறுப்பு) இந்த நிலத்தை இரண்டு தனிநபர்களுக்கு வெறும் 2 கோடி ரூபாய்க்கு பத்திரப் பதிவு செய்து கொடுத்ததாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

    கோயில் நிர்வாகம் சார்பில் பத்திரப் பதிவுத் துறைக்கு அனுப்பியுள்ள விரிவான மனுவில், “பழனி கோயில் இணை ஆணையர் தண்டபாணி சுவாமிகள் மடத்திற்கு தக்காராக நியமிக்கப்பட்டுள்ளார். அவரை நீக்கக் கோரிய மனு நீதிமன்றத்தால் தள்ளுபடி செய்யப்பட்டது. மடத்திற்குச் சொந்தமான இந்த நிலத்தை தனிநபர்கள் பெயருக்கு மாற்ற முடியாது என உத்தரவு உள்ளது” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    மேலும், “எந்த ஆவணங்களையும் சரியாக சரிபார்க்காமல், உயர் நீதிமன்றம் மற்றும் உச்ச நீதிமன்ற உத்தரவுகள், கோயில் நிர்வாகத்தின் எழுத்துப்பூர்வ அறிவிப்புகளை மதிக்காமல் பதிவு செய்யப்பட்டது சட்டவிரோதம்” எனக் கூறி, பத்திரப் பதிவை உடனடியாக ரத்து செய்யவும், சம்பந்தப்பட்ட சார் பதிவாளர் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்கவும் வலியுறுத்தப்பட்டுள்ளது.

    பத்திரப் பதிவுத் துறைத் தலைவர், மதுரை மண்டல துணைத் தலைவர் மற்றும் திண்டுக்கல் மாவட்டப் பதிவாளர் ஆகியோருக்கு அனைத்து ஆதாரங்களுடன் அறிக்கை அனுப்பப்பட்டுள்ளது. அதோடு, தகுதியற்ற ஆவணங்கள் மூலம் பதிவு செய்த சார் பதிவாளர், நிலத்தை எழுதிக் கொடுத்தவர் மற்றும் வாங்கியவர்கள் மீது காவல்துறையில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம் பழனி கோயில் நிர்வாகத்திலும், இந்து சமய அறநிலையத்துறையிலும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இந்த வழக்கின் மீதான விசாரணை துரிதப்படுத்தப்பட்டு, சொத்து மீட்டெடுக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    palani murugan temple Registration
    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleதவெக vs திமுக..!! அடித்துக்கொள்ளும் கட்சிகள்..!! உள்மோதலால் பலவீனமடையும் மாநில உரிமைகள்..!!
    Next Article தமிழக அரசு மருத்துவக் கல்லூரிகளில் 100 எம்பிபிஎஸ் இடங்கள் உயர்வு: தேசிய மருத்துவ ஆணையம் அனுமதி!
    editor5

    Related Posts

    இந்தியப் பொருட்களுக்கு அமெரிக்கா 12.5% கூடுதல் சுங்கவரி: முடிவை மறுபரிசீலனை செய்ய வலியுறுத்தல்

    July 11, 2026

    இந்தியா-நியூசிலாந்து இருதரப்பு வர்த்தகம் 2030-க்குள் இரட்டிப்பாகும்: பிரதமர் மோடி நம்பிக்கை!

    July 11, 2026

    வியட்நாம் படகு விபத்து; தமிழ்நாடு அரசு  உதவி எண்கள் அறிவிப்பு

    July 11, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    இந்தியப் பொருட்களுக்கு அமெரிக்கா 12.5% கூடுதல் சுங்கவரி: முடிவை மறுபரிசீலனை செய்ய வலியுறுத்தல்

    டென்னிஸ் ஜாம்பவான் ரோஜர் பெடரரைச் சந்தித்த கிரிக்கெட் கடவுள் சச்சின்!

    இந்தியா-நியூசிலாந்து இருதரப்பு வர்த்தகம் 2030-க்குள் இரட்டிப்பாகும்: பிரதமர் மோடி நம்பிக்கை!

    கே.பாக்யராஜ் நடிக்க இருந்த கதாபாத்திரத்தில் களமிறங்கும் பேரரசு!

    வியட்நாம் படகு விபத்து; தமிழ்நாடு அரசு  உதவி எண்கள் அறிவிப்பு

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.