நடிகர் விஜய் கடைசியாக நடித்து கிடப்பில் கிடக்கிறது ஜனநாயகன். தேர்தலில் களமிறங்குவதற்காக சினிமாவில் முழுக்கு போட இருப்பதாகவும், தனது கடைசி படம் ஜனநாயகன் என தெரிவித்திருந்தார் விஜய். அவருக்கு பிரியா விடை கொடுப்பதற்காக மலேசியாவில் மிகப் பிரம்மாண்டமாக விழா நடைபெற்றது.
தொடர்ந்து இம்மாத தொடக்கத்தில் பொங்கலுக்கு படம் வெளியாகும் என அறிவிப்பு வெளியாகி அதற்கான ஏற்பாடுகளும் நடைபெற்று வந்தது. ஆனால் கடைசி நேரம் வரை படத்தின் சென்சார் சான்றிதழ் கிடைக்காததால் படம் வெளியாவதில் சிக்கல் ஏற்பட்டது. இதற்கிடையில் விஜய் தேர்தலில் போட்டியிட்டு முதலமைச்சரும் ஆகி விட்டார்.
இன்றும் படம் வெளியாகவில்லை. முன்னதாக படம் இணையத்தில் வெளியாகி கிட்டத்தட்ட ஒரு கோடிக்கும் மேற்பட்டோர் படத்தை பார்த்துள்ளனர். இது தொடர்பாக வழக்குகளும் நீதிமன்றத்தில் நடந்தது. இந்த நிலையில் சமீபத்தில் படத்திற்கு ஏ சான்றிதழ் கொடுக்கப்பட்டது. அத்தோடு பல காட்சிகள் நீக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது.
இப்படிப்பட்ட சூழலில், ஜனநாயகன் திரைப்படம் ஜூலை 24-ல் உலகம் முழுவதும் வெளியாக இருப்பதாகவும், புதிய கட்டுடன் கூடிய டிரைய்லரும் உருவாகி வருவதாக கோலிவுட் வட்டாரத்தில் கிசுகிசுக்கப்படுகிறது. இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்புக்காக ரசிகர்களுடன் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.

