நடிகர் விஜய்யின் கடைசிப் படமான ஜனநாயகன் திரைப்படம் மே மாதம் வெளியாக இருப்பதாக புதிய தகவல் வெளியாகியுள்ளது.

நடிகர் விஜய் தனது நடிப்பு தொழிலை விட்டுவிட்டு முழு நேர அரசியல்வாதியாக தனது அடுத்த பயணத்தை தொடர்ந்து வருகிறார். நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் தனித்து களம்கண்ட விஜய்யின் தவெகவிற்கு குறிப்பிட்ட வாக்கு சதவீதம் கிடைக்க வாய்ப்புள்ளதாக அரசியல் வல்லுநர்கள் கூறுகின்றனர்.

இந்த நிலையில், அரசியலுக்கு வரும் முன்னர், திரைத்துறையில் அவர் தனது கடைசிப் படமாக அறிவித்த ஜனநாயகன் திரைப்படம் கடந்த ஜனவரி மாதம் 9-ம் தேதி வெளியாக இருந்தது. தணிக்கைச் சான்றிதழ் கிடைக்காததால் ஒத்தி வைக்கப்பட்ட இப்படம் இப்போது வரையிலும் வெளியாகவில்லை. தணிக்கை வாரிய மறுஆய்வுக் குழுவின் பரிசீலனையில் இருந்தப் போதே, கடந்த ஏப்ரல் 3-ம் தேதி சட்டவிரோதமாக ஜனநாயகன் திரைப்படம் இணையத்தில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இந்த நிலையில் ஜனநாயகன் திரைப்படம் மே 8-ம் தேதி வெளியாகவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சென்சார் குழுவினர் ஜனநாயகன் படத்திற்கு சான்றிதழ் வழங்குவது தொடர்பாக முக்கிய முடிவை அறிவிக்க இருப்பதாக ஏற்கனவே தகவல் வெளியான நிலையில், தற்போது படம் ரிலீஸ் குறித்தும் சமூக வலைதளங்களில் பலகட்ட தகவல்கள் உலா வருகிறது. இருப்பினும் ரசிகர்கள் படக்குழுவின் அதிகாரப்பூர்வ அறிவிப்புக்காக காத்துகிடக்கின்றனர்.

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version