நீலகிரி மாவட்டம் கூடலூர் பாடந்துறை பகுதியில் உலா வந்த இரண்டு யானைகளின் சிசிடிவி காட்சிகள் பதிவாகி மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
தொடர்ந்து இதே பகுதியில் யானைகள் உலா வருவது சிசிடிவி கேமராவில் பதிவாகி வரும் நிலையில் ஒவ்வொரு நாளும் யானைகள் நடமாட்டத்தால் மக்கள் வீடுகளை விட்டு வெளியே வர அச்சமடைந்துள்ளனர். நீலகிரி மாவட்டம் கூடலூரை சுற்றியுள்ள பல்வேறு கிராமப் பகுதிகளில் யானைகள் நடமாட்டம் அதிகமாக காணப்படுகிறது குறிப்பாக கூடலூர் அருகே உள்ள பாடந்துறை கணியம் வயல் கிராமப் பகுதியில் யானைகள் நடமாட்டம் அடிக்கடி காணப்படுவது சிசிடிவி கேமராவில் பதிவாகி வருகிறது.
கடந்த சில நாட்களுக்கு முன்பு இதே சாலையில் உலா வந்த யானையிடமிருந்து வெவ்வேறு நாட்களில் மூன்று பேர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பித்தனர் இந்த நிலையில் கடந்த மூன்று நாட்களுக்கு முன்பு வனத்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தபோது வனத்துறையினரின் வாகனத்தின் மிக அருகே வந்த யானை மெதுவாக நடந்து சென்றது இதனால் வாகனத்தில் இருந்த வனத்துறை ஊழியர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
இதுபோல் அடிக்கடி கணியம் வயல் பகுதியில் உலா வரும் யானைகளின் சிசிடிவி காட்சிகள் வெளியாகி வரும் நிலையில் கடந்த நான்கு நாட்களாக இந்த இரண்டு யானைகளை விரட்ட கும்கி யானைகள் உதவியுடன் வனத்துறை ஊழியர்கள் தீவிரமாக ஈடுபட்டு வரும் நிலையில், இன்று அதிகாலை வனத்துறையினரின் கண்களுக்கு போக்கு காட்டிய இரண்டு யானைகள் சாலையில் ஒய்யாரமாக நடந்து வந்தன. ஒன்றன்பின் ஒன்றாக நடந்து வந்த யானைகளின் சிசிடிவி காட்சிகள் மீண்டும் பதிவாகியுள்ள நிலையில் மக்களிடையே மேலும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
