Close Menu
    What's Hot

    கரூர் அருகே பயங்கரம்!. வீட்டிற்குள் புகுந்து மர்மநபர்கள் வெறிச்செயல்! தாய் பலி, மகள் படுகாயம்!

    கர்நாடகத்தின் தமிழர் விரோதப் போக்கு… திருமாவளவன் கண்டனம்… அனைத்துக் கட்சி கூட்டத்தை கூட்ட அரசுக்கு கோரிக்கை

    Red Zone பகுதியில் முதலமைச்சர் Drone Shot – விதிகளை மீறியதாக அதிமுக கண்டனம்!

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • உலகம்
    • சிறப்புக் கட்டுரைகள்
    • வர்த்தகம்
    • More
      • டெக்னாலஜி
      • LIFESTYLE
      • koilgal
    TN Talks
    Home»Featured»பள்ளிகள் அருகே ஜங்க் உணவுகள் விற்க தடை..!! மகாராஷ்டிரா அரசு அதிரடி உத்தரவு.. காரணம் இதுதானாம்..!!
    Featured

    பள்ளிகள் அருகே ஜங்க் உணவுகள் விற்க தடை..!! மகாராஷ்டிரா அரசு அதிரடி உத்தரவு.. காரணம் இதுதானாம்..!!

    editor5By editor5July 30, 2026No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    image 28 11
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    பள்ளி மாணவ-மாணவிகளின் உடல் நலத்தைப் பாதுகாக்கும் வகையில் மகாராஷ்டிரா மாநில அரசு முக்கிய உத்தரவு ஒன்றைப் பிறப்பித்துள்ளது. பள்ளி வளாகங்களில் சமோசா, வடபாவ், சிப்ஸ், சாக்லேட், ஐஸ்கிரீம், குளிர்பானங்கள் உள்ளிட்ட அதிக கொழுப்பு, சர்க்கரை மற்றும் உப்பு நிறைந்த உணவுப் பொருட்களை விற்பனை செய்வதற்கு முழுமையான தடை விதிக்கப்பட்டுள்ளது.

    மாநில உணவு மற்றும் மருந்து நிர்வாகத் துறை வெளியிட்டுள்ள இந்த உத்தரவின்படி, பள்ளி வளாகத்திற்குள் மட்டுமின்றி, பள்ளியிலிருந்து 50 மீட்டர் சுற்றளவில் உள்ள கடைகளிலும் இத்தகைய உணவுகளை விற்பனை செய்யவும், அவற்றுக்கான விளம்பரங்களை வெளியிடவும் தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த நடவடிக்கை மாநிலத்தில் உள்ள அரசு, அரசு உதவி பெறும், தனியார், உறைவிடப் பள்ளிகள், சிபிஎஸ்இ, ஐசிஎஸ்இ உள்ளிட்ட அனைத்து பாடத்திட்டங்களின் கீழ் இயங்கும் சுமார் 1.08 லட்சம் பள்ளிகளுக்கும் பொருந்தும்.

    பள்ளி கேன்டீன்கள், ஹாஸ்டல் உணவகங்கள், மதிய உணவு தயாரிக்கும் சமையலறைகள், அங்கன்வாடி மையங்கள் மற்றும் பள்ளிகளுக்கு உணவு வழங்கும் அனைத்து சமையல் கூடங்களிலும் உணவு பாதுகாப்பு மற்றும் தர ஆணையத்தின் (FSSAI) சான்றிதழ் கட்டாயம் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், உணவு பாதுகாப்பு தகவல் பலகை வைத்தல், உணவு பாதுகாப்பு மேற்பார்வையாளர் நியமித்தல், ஹெல்த் & வெல்னஸ் நடவடிக்கைகள், தூய்மையான குடிநீர் வசதி, சுகாதாரமான சமையலறை ஆகியவை கட்டாயப்படுத்தப்பட்டுள்ளன.

    மகாராஷ்டிரா உணவு மற்றும் மருந்து நிர்வாக ஆணையர் துகாராம் முண்டே இது குறித்து கூறுகையில், “’Safe Food, Safe Maharashtra’ என்ற பிரசாரத்தின் கீழ் மாணவர்கள் ஆரோக்கியமான, சத்தான உணவுகளை உட்கொள்ள வேண்டும் என்பதில் அரசு உறுதியாக உள்ளது. பள்ளி முதல்வர்கள் மற்றும் நிர்வாகிகள் முதற்கட்டமாக இந்த உத்தரவை கண்டிப்புடன் அமல்படுத்த வேண்டும். அவ்வப்போது ஆய்வுகள் மேற்கொள்ளப்படும். விதிகளை மீறுபவர்கள் மீது உணவு பாதுகாப்பு மற்றும் தரச் சட்டம் 2006-ன் கீழ் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்” என்றார்.

    இந்தத் தடை உத்தரவு, உலக அளவில் அதிகரித்து வரும் குழந்தைகளிடையேயான பருமனான உடல் எடை, நீரிழிவு, உயர் இரத்த அழுத்தம் போன்ற பிரச்னைகளுக்கு எதிரான முக்கியப் படியாகக் கருதப்படுகிறது. பள்ளி நாட்களில் மாணவர்கள் நாளின் பெரும் பகுதியைச் செலவிடும் இடத்தில் சத்தான உணவு கிடைப்பது அவர்களின் உடல் மற்றும் மன வளர்ச்சிக்கு அடிப்படையானது என உடல்நல நிபுணர்கள் வரவேற்பு தெரிவித்துள்ளனர். இந்த நடவடிக்கை மாணவர்களிடையே ஆரோக்கியமான உணவுப் பழக்கத்தை ஊக்குவிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    junk foods maharashtra schools
    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleநள்ளிரவில் கைவரிசை!. இரும்புப் பொருட்களை திருடும் இளைஞர்கள்!. சிசிடிவி காட்சிகள் வெளியீடு!
    Next Article திமுக எம்.எல்.ஏ மணிகண்டேயன் ஜாமீன் மனு மீதான தீர்ப்பு ஒத்தி வைப்பு!
    editor5

    Related Posts

    கரூர் அருகே பயங்கரம்!. வீட்டிற்குள் புகுந்து மர்மநபர்கள் வெறிச்செயல்! தாய் பலி, மகள் படுகாயம்!

    July 30, 2026

    கர்நாடகத்தின் தமிழர் விரோதப் போக்கு… திருமாவளவன் கண்டனம்… அனைத்துக் கட்சி கூட்டத்தை கூட்ட அரசுக்கு கோரிக்கை

    July 30, 2026

    Red Zone பகுதியில் முதலமைச்சர் Drone Shot – விதிகளை மீறியதாக அதிமுக கண்டனம்!

    July 30, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    கரூர் அருகே பயங்கரம்!. வீட்டிற்குள் புகுந்து மர்மநபர்கள் வெறிச்செயல்! தாய் பலி, மகள் படுகாயம்!

    கர்நாடகத்தின் தமிழர் விரோதப் போக்கு… திருமாவளவன் கண்டனம்… அனைத்துக் கட்சி கூட்டத்தை கூட்ட அரசுக்கு கோரிக்கை

    Red Zone பகுதியில் முதலமைச்சர் Drone Shot – விதிகளை மீறியதாக அதிமுக கண்டனம்!

    ஃபேஸ்புக் காதல் முதல் போதை மறுவாழ்வு மைய சித்ரவதை வரை!. திருநங்கையை கரம்பிடித்த ஐடி ஊழியர்!

    திமுக எம்.எல்.ஏ மணிகண்டேயன் ஜாமீன் மனு மீதான தீர்ப்பு ஒத்தி வைப்பு!

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.