அன்பே டயானா டிரெய்லர் வெளியீட்டு விழாவில், சமுத்திரக்கனி குறித்து நடிகர் சேத்தன் பொறுமியநிலையில், சேத்தன் இன்னும் உயரம் தொடுவார் எனக்கூறி அவரை குளிரவைத்தார் சமுத்திரக்கனி.

நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்ட நடிகர், இயக்குநர் சமுத்திரக்கனி பேசுகையில்,

சேத்தன் என்னுடைய நீண்ட நாள் நண்பர். திரையில் அவர் எந்தக் கதாபாத்திரத்தில் நடித்தாலும், அதற்கு ஒரு தனித்துவமான உயிரைக் கொடுப்பார். நடிகராக மட்டுமல்ல, ஒரு மனிதராகவும் அவர் மீது எனக்கு மிகுந்த மரியாதை இருக்கிறது. விடாது கருப்பு மூலம் தமிழகத்தையே கட்டிப்போட்டவர் அவர் இன்னும் பெரிய உயரம் தொடுவார்.

இயக்குநர் பாரியை பார்க்கும்போது, சினிமா மீது இருக்கும் அவரது காதலும், அர்ப்பணிப்பும் தெளிவாக தெரிகிறது. இப்படிப்பட்ட இளம் இயக்குநர்கள்தான் தமிழ் சினிமாவுக்கு புதிய கதைகளையும், புதிய பார்வைகளையும் கொண்டு வருகிறார்கள். அவர் இந்தப் பயணத்தில் இன்னும் பெரிய உயரங்களை அடைய வேண்டும் என்று மனதார வாழ்த்துகிறேன்.

அன்பே டயானாபடத்தின் டிரெய்லரிலும், படக்குழுவின் பேச்சிலும் ஒரு நல்ல குடும்பப் பொழுதுபோக்கு திரைப்படத்திற்கான நேர்மறையான உணர்வு தெரிகிறது. இந்தப் படத்தில் பணியாற்றிய நடிகர்கள், தொழில்நுட்பக் கலைஞர்கள் மற்றும் தயாரிப்பாளர்கள் அனைவருக்கும் என்னுடைய வாழ்த்துகள்.

இந்தப் படம் ரசிகர்களின் மனதை வென்று மிகப்பெரிய வெற்றி பெற வேண்டும். பாரி மற்றும் ஒட்டுமொத்த படக்குழுவிற்கும் என்னுடைய அன்பும், வாழ்த்துகளும் எனக் கூறினார்.

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version