மாண்புமிகு முதலமைச்சர் விஜய்க்கு வாழ்த்துக்கள் என இயக்குநர் சமுத்திரக் கனி தெரிவித்துள்ளார்.

தமிழ்த் திரைப்பட உலகில் தனி முத்திரை பதித்த இயக்குநரும் நடிகருமான சமுத்திரக்கனி திருப்பதி கோயிலில் சாமி தரிசனம் மேற்கொண்டார். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அவர்,

பல தடைகளைத் தாண்டி இப்போது ஆட்சி அமைக்க இருக்கும் என்னுடைய அன்பு சகோதரர், மாண்புமிகு தமிழக முதலமைச்சர் விஜய் அவர்களுக்கு,  என்னுடைய மனமார்ந்த வாழ்த்துகள். இந்த நாளுக்காகத்தான் காத்திருந்தேன்.  ரொம்ப சந்தோஷமா இருக்கேன். சகோதரா, இன்னும் நிறைய தடைகள் வரும். இதை எல்லாவற்றையும் நீங்கள் உடைக்கணும்னு நான் இறைவனைப் பிரார்த்தனைப் பண்ணிக்கிறேன். பெருசா ஜெயிப்போம். வெல்வோம் என விஜய்க்காக தனது வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளார்.

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version