கோடை மழையின் காரணமாக உடுமலைப்பேட்டை அருகே திருமூர்த்தி மலை பஞ்சலிங்க அருவியில்  ஏற்பட்டுள்ள வெள்ளப்பெருக்கினால் சுற்றுலாப் பயனிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.

திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை பகுதியில் கோடை மழை பெய்து வருகிறது. திருமூர்த்தி மலை பஞ்சலிங்க அருவியில்  நீர்ப்பிடிப்பு பகுதிகளான குருமலை, குளிப்பட்டி, மேல் குருமலை ஆகிய பகுதிகளில் பெய்துவரும்  கோடை மழையின் காரணமாக பஞ்சலிங்க அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு அருவியில் தண்ணீர்பீறிட்டு பாய்கிறது.

இதனால் இன்று காலை முதல் சுற்றுலாப் பயணிகள் அருவி பகுதிக்குச் செல்லவும் அருவியில் குளிக்கவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version