இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் கோடை வெயில் சுட்டெரித்து வரும் நிலையில், பொதுமக்கள் தகுந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் எனப் பிரதமர் நரேந்திர மோடி வலியுறுத்தியுள்ளார்.

நாட்டின் பல மாநிலங்களில் தற்போது கடுமையான வெப்ப அலை நிலவி வருகிறது. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், வெயிலின் தாக்கத்திலிருந்து தற்காத்துக்கொள்வது குறித்துப் பிரதமர் மோடி தனது ‘எக்ஸ்’ பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

https://x.com/narendramodi/status/2059507227510399462?t=Un8z2IShKQoAzP5J8MxJwA&s=08

அதில் அவர் குறிப்பிட்டிருப்பதாவது, “இந்தியாவின் பல்வேறு பகுதிகளிலும் தற்போது வெப்பநிலை கடுமையாக உயர்ந்து வருகிறது; அதனுடன் தொடர்புடைய பல சவால்களையும் நாம் எதிர்கொண்டு வருகிறோம். இந்த சுட்டெரிக்கும் கோடை வெப்பம் நம் அனைவரையும் கடுமையாகப் பாதிக்கிறது. எனவே, பொதுமக்கள் முடிந்தவரை அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் மேற்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன்.

தயவுசெய்து போதுமான அளவு தண்ணீர் குடித்து, உங்கள் உடலை நீர்ச்சத்துடன் வைத்துக் கொள்ளுங்கள். வீட்டை விட்டு வெளியே செல்லும் போது மறக்காமல் தண்ணீர் எடுத்துச் செல்லுங்கள். உங்களைச் சுற்றி இருப்பவர்களுக்கும், தாகத்துடன் இருப்பவர்களுக்கும் ஒரு டம்ளர் தண்ணீர் கொடுத்து உதவுங்கள். இதுபோன்ற கடுமையான வானிலையின் போது, நீங்கள் காட்டும் இந்த சிறு கருணை பெரிய அளவில் உதவியாக இருக்கும்.”

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version