தமிழ்நாட்டில் இன்று ஒரே நாளில் 12 இடங்களில் வெயில் 100 டிகிரி பாரன்ஹீட்டைக் கடந்து பதிவாகியுள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
கடந்த சில நாட்களாகப் பரவலாகப் பெய்த மழையின் காரணமாகத் தமிழகத்தில் வெயிலின் தாக்கம் சற்று குறைந்திருந்த நிலையில், தற்போது மீண்டும் வெயிலின் தாக்கம் அதிகரிக்கத் தொடங்கி உள்ளது. இந்தநிலையில், இன்று (ஜூலை 12) ஒரே நாளில் தமிழகத்தின் 12 முக்கிய இடங்களில் வெயில் 100 டிகிரி பாரன்ஹீட்டைக் கடந்து பதிவாகியுள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
வானிலை ஆய்வு மையத்தின் அறிவிப்பின்படி, அதிகபட்சமாக மதுரை விமான நிலையத்தில் 105.8 டிகிரி பாரன்ஹீட் வெப்பம் பதிவாகி முதலிடத்தில் உள்ளது. 100 டிகிரியைத் தாண்டிய இடங்களின் விவரம்:
மதுரை விமான நிலையம் 105.8°F
வேலூர் 105.62°F
மதுரை நகரம் 104.36°F
திருத்தணி 103.64°F
சென்னை (மீனம்பாக்கம்) 102.56°F
கடலூர் 101.84°F
பரங்கிப்பேட்டை 101.48°F
திருச்சி 101.3°F
நாகப்பட்டினம் 101.3°F
சென்னை (நுங்கம்பாக்கம்) 100.76°F
பாளையங்கோட்டை 100.4°F
தூத்துக்குடி 100.0°F
தலைநகர் சென்னையைப் பொறுத்தவரை புறநகர் பகுதியான மீனம்பாக்கத்தில் 102.56 டிகிரியும், நகர்ப்பகுதியான நுங்கம்பாக்கத்தில் 100.76 டிகிரியும் வெயில் பதிவாகியுள்ளது. மழையின் தற்காலிக ஓய்வுக்குப் பிறகு திடீரென கோடைக்காலத்தைப் போல வெயில் மீண்டும் சுட்டெரிக்கத் தொடங்கியுள்ளதால், பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் பெரும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர்.
