தமிழ்நாட்டில் இன்று 7 இடங்களில் வெப்பநிலை 100 டிகிரி பாரன்ஹீட்டை (சுமார் 38°C) கடந்து பதிவாகியுள்ளது.

தென்மேற்கு பருவ தொடங்கிய போதும், இன்னும் முழுமையாக மழைப் பொழிவு கிடைக்கப் பெறவில்லை. இதனிடையே தமிழ்நாட்டில் பல்வேறு இடங்களில் வெப்பநிலை கடுமையாகவே பதிவாகி வருகிறது. பகல் வேளையில் வெளியில் நடமாட முடியாத அளவில் அனல் காற்று வீசி, வாட்டி வதைத்து வருவதால் மக்கள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். தமிழகத்தில் அதிகபட்சமாக 7 இடங்களில் இன்று வெப்பம் 100 டிகிரி பாரன்ஹீட்டைத் தாண்டியுள்ளது.

  • மதுரை விமான நிலையம் 103 டிகிரி பாரன்ஹீட்
  • மதுரை நகரம் 103 டிகிரி பாரன்ஹீட்
  • மீனம்பாக்கம் 102 டிகிரி பாரன்ஹீட்
  • நுங்கம்பாக்கம் 102 டிகிரி பாரன்ஹீட்
  • திருச்சி 101 டிகிரி பாரன்ஹீட்
  • தஞ்சை 100 டிகிரி பாரன்ஹீட்
  • நாகை 100 டிகிரி பாரன்ஹீட்

தமிழகத்தில் அடுத்த சில நாட்களுக்கு வறண்ட வானிலை நிலவும் என்றும், உள் மாவட்டங்களில் இயல்பை விட 2°C முதல் 4°C வரை வெப்பநிலை அதிகரிக்கக்கூடும் என்றும் வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version