நெல்லை ரயில் நிலையத்தில் உள்ள பராமரிப்பு பணிமனையில் தண்டவாள மறுசீரமைப்பு பணிகள் நடைபெறுவதால், தென்மாவட்ட ரயில்களின் போக்குவரத்தில் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

இதனடிப்படையில் பயணிகள் தங்கள் பயணத்தை திட்டமிட்டு மேற்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

முழுமையாக ரத்து செய்யப்படும் ரயில்கள்:

கோவை – நாகர்கோவில் எக்ஸ்பிரஸ் (வ.எண். 16322): ஜூன் 20-ம் தேதி முழுமையாக ரத்து செய்யப்படுகிறது.

நாகர்கோவில் – கோவை எக்ஸ்பிரஸ் (வ.எண். 16321): ஜூன் 20-ஆம் தேதி முழுமையாக ரத்து செய்யப்படுகிறது.

மதுரை – புனலூர் எக்ஸ்பிரஸ் (வ.எண். 16729): ஜூன் 26 முதல் ஜூன் 29 வரை ரத்து.

புனலூர் – மதுரை எக்ஸ்பிரஸ் (வ.எண். 16730): ஜூன் 27 முதல் ஜூன் 30 வரை ரத்து.

ராமேஸ்வரம் – கன்னியாகுமரி எக்ஸ்பிரஸ் (வ.எண். 22621): ஜூன் 27 மற்றும் 29 ஆகிய தேதிகளில் ரத்து.

கன்னியாகுமரி – ராமேஸ்வரம் எக்ஸ்பிரஸ் (வ.எண். 22622): ஜூன் 28 மற்றும் 30 ஆகிய தேதிகளில் ரத்து.

செங்கோட்டை – ஈரோடு எக்ஸ்பிரஸ் (வ.எண். 16846): ஜூன் 28 முதல் ஜூன் 30 வரை ரத்து.

ஈரோடு – செங்கோட்டை எக்ஸ்பிரஸ் (வ.எண். 16845): ஜூன் 27 முதல் ஜூன் 29 வரை ரத்து.

பகுதியாக ரத்து செய்யப்படும் ரயில்கள்:

நாகர்கோவில் – கோவை எக்ஸ்பிரஸ் (16321/16322): ஜூன் 21 முதல் 29 வரை, நாகர்கோவில்-திண்டுக்கல் இடையே ரத்து செய்யப்படுகிறது. இந்த ரயில் திண்டுக்கல்லில் இருந்து மதியம் 1.25 மணிக்கு கோவைக்கு இயக்கப்படும்.

நாகர்கோவில் – தாம்பரம் அந்தியோதயா எக்ஸ்பிரஸ் (20692/20691): ஜூன் 21 முதல் 30 வரை, நாகர்கோவில்-திண்டுக்கல் இடையே ரத்து. இது திண்டுக்கல்லில் இருந்து இரவு 8.35 மணிக்கு தாம்பரத்திற்கு இயக்கப்படும்.

திருச்செந்தூர் – பாலக்காடு எக்ஸ்பிரஸ் (16732/16731): ஜூன் 24 முதல் 29 வரை திருச்செந்தூர் – வாஞ்சி மணியாச்சி இடையே ரத்து. வாஞ்சி மணியாச்சியில் இருந்து மதியம் 2.25 மணிக்கு பாலக்காடுக்கு புறப்படும். ஜூன் 30-ம் தேதி மட்டும் மதுரை வரை ரத்து செய்யப்பட்டு, மதுரையில் இருந்து மாலை 4.20 மணிக்கு பாலக்காடுக்கு புறப்படும்.

நெல்லை எக்ஸ்பிரஸ் (12632): ஜூன் 27-29 மணியாச்சியில் இருந்து இரவு 9.10 மணிக்கு புறப்படும்.

பாலருவி எக்ஸ்பிரஸ் (16791/16792): ஜூன் 27, 28 கொல்லம் வரை பாதிக்கப்படும்.

செந்தூர் எக்ஸ்பிரஸ் (20606): ஜூன் 27, 30 வரை விருதுநகரில் இருந்து நள்ளிரவு 11.35 மணிக்கு புறப்படும்

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version