மிழக சட்டமன்றத்தில் ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதத்தின்போது எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி முன்வைத்த குற்றச்சாட்டுகளும், அதற்கு முதலமைச்சர் விஜய் கொடுத்த பதிலடியும்  ஆளும் தமிழக வெற்றிக் கழகம் மற்றும் எதிர்க்கட்சியான திமுக இடையே ஒரு கடுமையான வார்த்தை போராக மாறியுள்ளது.

குறிப்பாக “திரைப்படப் பாணியில் பேசுகிறார் முதலமைச்சர் விஜய்” என்று  உதயநிதி முன்வைத்த விமர்சனத்திற்கு தவெக தரப்பில் மிகக் காரசாரமான பதிலடி கொடுக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக தவெக ஐடி விங் எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,  “சினிமா பாணியில் பேசினார் என்ற ஒரு டொக்கு விழுந்த பாத்திரத்தையே மீண்டும் மீண்டும் உருட்டுகிறார் மாண்புமிகு எதிர்க்கட்சித் தலைவர். ‘முதல்வர் ஸ்க்ரிப்ட் கொண்டு வந்து பேசுகிறார்’ என்று பக்கம் பக்கமாக எழுதப்பட்ட ஸ்க்ரிப்ட் ஃபைலை வைத்துக்கொண்டு சபையில் பேசியவர் சொல்கிறார். அதைவிட காமெடி என்னவென்றால், ஸ்க்ரிப்ட் வைத்துக்கொண்டு எதிர்க்கட்சித் தலைவர் ப்ரஸ் மீட் கொடுத்ததுதான் ஒரு கல் ஒரு கண்ணாடி காமெடியைவிட ஹைலைட் காமெடி.

பெண்கள் பாதுகாப்பு, மின்வெட்டு, சட்டம் ஒழுங்கு குறித்து நமது வெற்றித் தலைவர் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் தெளிவாகப் பதில் கொடுத்தார். ஆனால், அதைக் காதில் வாங்காமல், தன் இஷ்டத்திற்குப் பேசி, தன் வாயால் தன்னையே கிழிகிழியென்றுக் கிழித்துக்கொள்கிறார் எதிர்க்கட்சித் தலைவர்.

போராட்டங்களைத் தூண்டிவிடும் அரசியல் கட்சி என்ற அர்த்தத்தில்தான் நம்முடைய மக்கள் விரும்பும் முதல்வர் அவர்கள் பேசினார். ஆனால், ‘எங்கப்பன் குதிருக்குள் இல்லை’ என்று தாங்கள் செய்யும் மறைமுக வேலையை திரு.உதயநிதியே பொதுவெளியில் உளறி உடைத்து இருக்கிறார் என்றுதான் தோன்றுகிறது.

Party fund சொன்னதும் ஏன் பதறுகிறது திமுக?. அப்படியெனில் அந்த party fund கொள்ளையில் ஈடுபட்டது யார் என்று மக்களுக்குத் தெரிந்துவிட்டது. மக்களால் ஆட்சி அதிகாரத்தில் இருந்து cut செய்யப்பட்ட திமுக, ஆக்‌ஷன் கட் பற்றிப் பேசுவது டென்ஷனில் உளறுவதுபோலவே இருக்கிறது.

ஓலைப்பாயில் தண்ணீர் ஊற்றியதுபோல மதிப்புமிக்க எதிர்க்கட்சித் தலைவர் வாய்க்கு வந்ததை உளறுவதை இனியாவது நிறுத்த வேண்டும்.

நம் வெற்றித் தலைவர் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் ஷூட்டிங் போல இருக்கிறது என்கிறார் திரு.உதயநிதி. ஷூட்டிங் என்பது துப்பாக்கி சுடுதலையும் குறிக்கும். அப்படித்தான் எங்களின் முதலமைச்சரின் பேச்சு திமுகவை துப்பாக்கியின் தோட்டாக்களைப் போலத் துளைத்தெடுத்திருக்கிறது போலும்.

தங்கள் குடும்பத்தை தவிர வேறு யாரும் ஆட்சிக்கு வந்துவிடவே கூடாது. அப்படி வந்தால் அன்று ஒருவர் சட்டையைக் கிழித்துக்கொண்டு சட்டசபையில் இருந்து ஓடி வந்தார். இன்று ஒருவர் ஆட்சி அதிகாரம் இழந்த சோகத்தில், சபையில் இருந்து பதிலளிக்க இயலாமல் வெளிநடப்பு என்ற பெயரில் விரக்தியில் வெளியே ஓடி இருக்கிறார்.

எங்கள் வெற்றித் தலைவர் திமுக மீது ஊழல் குற்றச்சாட்டுகளைச் சொன்னால், அதற்கு ஒருநாளும் பதில் சொல்லத் திராணி இல்லை. மாறாக, தனிப்பட்டத் தாக்குதலில் இறங்குவதே திமுகவின் தரம். தங்கத்தைப் பார்த்து தகரம் குறை சொல்வது தரம் குறைந்த செயல் என்றுதான் மக்கள் சொல்கின்றனர்.

பதவியில் ஒட்டிக்கொண்டு இருப்பது மட்டுமே தெரியும். பதிலளிக்கச் சொன்னால் பதறுவோம் என்கிற பரிதாப நிலையில் மதிப்புமிகு எதிர்க்கட்சி இருக்கிறது” எனக் கூறப்பட்டுள்ளது.

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version