கடந்த மார்ச் 15-ந் தேதி சட்டமன்ற தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டது. அதன் பின்னர் தேர்தல் நடத்தை விதிகள் அமலானதும், தி.மு.க அரசில் முக்கிய பதவிகளை வகித்த ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் ஒவ்வொருவராக இடமாற்றம் செய்யப்பட்டனர். அந்த வகையில் தலைமைச் செயலாளராக இருந்த முருகானந்தம் மாற்றப்பட்டு, வருவாய் நிர்வாக ஆணையராக பணியாற்றி வந்த சாய்குமார் தலைமைச் செயலாளராக கடந்த ஏப்ரல் 8-ந் தேதி நியமிக்கப்பட்டார்.

சாய்குமார், தெலுங்கானா மாநிலம் ஐதராபாத்தைச் சேர்ந்தவர். 31.8.1966 அன்று பிறந்தார். மதுரை மாவட்டம், தர்மபுரி, விருதுநகர் மாவட்டம் ஆகிய இடங்களில் ஆட்சியராக பணியாற்றியுள்ளார். பொதுப்பணித்துறை செயலாளர் உள்ளிட்ட முக்கிய பதவிகளை வகித்துள்ளார்.

2018-21-ம் ஆண்டுகளில் அப்போதைய முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் முதன்மைச் செயலாளர்-1 ஆகவும் பணியாற்றியுள்ளார். வரும் ஆகஸ்டு 31-ந் தேதி சாய்குமார் பணி ஓய்வு பெறுகிறார்.

இந்தநிலையில் இவரது பதவிக்காலத்தை மேலும் ஆறு மாதங்களுக்கு நீட்டித்து மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது. அதாவது கடந்த மாதம் 3ம் தேதி தமிழக அரசு விடுத்த பரிந்துரையை மத்திய அரசு ஏற்றுக்கொண்டு இந்த பணி நீட்டிப்பை வழங்கியுள்ளது.

இதன்படி, 1958-ஆம் ஆண்டு அகில இந்தியப் பணிகள் விதிகளின் (AIS (DCRB) Rules, 1958) விதி 16(1)-ன் கீழ், அவர் வரும் செப்டம்பர் 1, 2026 முதல் பிப்ரவரி 28, 2027 வரை தனது பதவியில் தொடர்ந்து நீடிப்பார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version