கடந்த சில நாட்களாக விண்ணைத் தொடும் அளவிற்கு உயர்ந்து வந்த தங்கத்தின் விலை, தற்போது அதிரடியான சரிவைக் கண்டு ஏழை மற்றும் நடுத்தர மக்களிடையே நிம்மதியை ஏற்படுத்தியுள்ளது.

இன்றைய நிலவரப்படி, ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.300 குறைந்து, ஒரு கிராம் ரூ.13,500-க்கு விற்பனை செய்யப்படுகிறது. சவரனுக்கு ரூ.2,400 வரை அதிரடியாகக் குறைந்து, ஒரு சவரன் ஆபரணத் தங்கம் ரூ.1,08,000 என்ற விலைக்கு விற்பனையாகிறது. கடந்த இரண்டு நாட்களில் மட்டும் தங்கம் விலை சவரனுக்கு ஒட்டுமொத்தமாக ரூ.5,600 வரை சரிந்துள்ளது. இது, தங்கம் வாங்க நினைப்பவர்களுக்கு மிகப்பெரிய வாய்ப்பாக அமைந்துள்ளது.

தங்கத்தின் விலை கணிசமாகக் குறைந்துள்ள நிலையில், வெள்ளியின் விலையில் எந்தவித மாற்றமும் இல்லை. ஒரு கிராம் வெள்ளி ரூ.260-க்கும், ஒரு கிலோ பார் வெள்ளி ரூ.2,60,000-க்கும் மாற்றமின்றி விற்பனை செய்யப்பட்டு வருகிறது. தங்கத்தின் விலையில் ஏற்பட்டுள்ள இந்த திடீர் சரிவு நகைப்பிரியர்களிடையே பெரும் மகிழ்ச்சியையும், நிம்மதியையும் ஏற்படுத்தியுள்ளது.

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version