அமைச்சர் கில்லி சரத் தொடர்பான விவகாரத்தில், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் முன்வைத்த விமர்சனங்களுக்கு பதிலளித்து, தவெக ஐடி விங் காரசாரமான அறிக்கை வெளியிட்டுள்ளது.
அந்த அறிக்கையில், ”போதைப் பொருள் பயன்படுத்தியது போல்” என்று திமுக கூறுவதை சுட்டிக்காட்டி,“போதைப் பொருள் பயன்படுத்தியது போல்”
என்றால் என்ன ‘போல்’ திமுக தலைவர் அவர்களே? அப்படியெனில் அது பொய்யென்று நீங்களும் சொல்ல வருகிறீர்கள்தானே ‘போல்’ கொளத்தூர் முன்னாள் எம்.எல்.ஏ. அவர்களே?.
‘விமர்சித்ததால் கைதா?.’ வேடிக்கையாகப் பேசுவதில் நீங்கள் வல்லவர்தான் ஸ்டாலின் சார். செய்த வினைகளால் சிக்கி வரும் உங்கள் அமைச்சர்கள் மற்றும் கட்சிக்காரர்கள் அனைவரையும்
விமர்சன வல்லுநர் ‘போல்’ ஆக்குவதில் ஆகச்சிறந்த ‘போல்’ அரசியல்வாதி நீங்கள்தான் ஸ்டாலின் சார்.
எதிர்க்கட்சிகளை மிரட்டுவதில் வல்லவர் நீங்கள்தான். எதிர்க்கட்சிகளை மட்டுமா?.கூட்டணிக் கட்சிகளையும் கொடியேற்றக்கூட விடாமல் நீங்கள் செய்ததெல்லாம் ‘போல்’ நல்ல அரசியலா ஸ்டாலின் சார்?.எல்லோருக்கும் S.O.P என்றிருந்தபோது எங்கள் வெற்றித் தலைவருக்கு மட்டும் Stalin sir Operating Procedure போட்டவர்தானே நீங்கள் சார்?.
ஜனநாயக உரிமையான விமர்சனங்களை வரவேற்பவரே எங்கள் வெற்றித் தலைவர். லஞ்ச ஊழலை ஒழித்து நல்லாட்சியான மனசாட்சி உள்ள மக்களாட்சியைத் தரும் எங்கள் வெற்றித் தலைவர் அவர்கள், உங்களைப் போல ‘போல்’ தலைவராக ஒருநாளும் இருக்க மாட்டார் என்பது மக்களுக்கே நன்கு தெரியும்.
இடைத்தேர்தலுக்காக மீண்டும் நல்லோர் வேடம் பூணத்துடிக்கும் உங்களின் ‘போல்’ அரசியலான போலி அரசியல் முகமூடி எல்லாம் விரைவிலேயே கழன்று விழத்தான் போகிறது.
முட்டுச்சந்தில் சிக்கிக்கொண்ட திமுக விற்கு டேக் டைவர்ஷனுக்கு இனி வழியே இல்லை என்பது தெரிந்தும் டேக் ஆஃப் ஆகாத உங்கள் அரசியலைக் கண்டு நீங்களே ஃபீல் செய்து ரீல்ஸ் போட்டு மகிழும் நாள் வெகுதொலைவில் இல்லை.
கோட்டையிலேயே ரீல்ஸ் போட்டவர்தானே நீங்கள்?. உங்களுக்குத் தெரியாத ரீல்ஸா?.ரியாலிட்டி புரியாமல் ரீல் விடும் ‘போல்’ திமுக தலைவர் அவர்களே…” எனக் கூறப்பட்டுள்ளது.
