கடந்த ஆண்டு செப்டம்பர் – அக்டோபர் காலகட்டத்தில் இந்தியாவில் நடைபெற்ற ஒருநாள் உலகக் கோப்பை தொடரில் இந்திய மகளிர் கிரிக்கெட் அணி, தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி முதலாவது கோப்பையை வென்று சாதனை படைத்திருந்தது. முன்னதாக நடைபெற்ற, பலம் வாய்ந்த ஆஸ்திரேலியாவிற்கு எதிரான   வாழ்வா-சாவா அரையிறுதி போட்டியில், ஜெமிமா ரோட்ரிக்ஸ் ஆட்டமிழக்காமல் 127 ரன்கள் குவித்து இந்தியாவை இறுதிப் போட்டிக்குத் தகுதி பெறச் செய்தார்.

இதேபோல் இறுதிப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணியில், தொடக்க வீராங்கனை ஷஃபாலி வர்மா அதிரடியாக 87 ரன்கள் குவித்தார். பின்னர் பந்துவீச்சிலும் அசத்திய அவர் 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

இந்தநிலையில், அடுத்த சில நாட்களில் வரும் ஜூன் 14, ஞாயிற்றுக்கிழமை) பர்மிங்காமில் தொடங்கவுள்ள டி20 உலகக் கோப்பை தொடரில் தங்களது முதல் போட்டியில் பாகிஸ்தானை எதிர்கொள்ளத் தயாராகி வருகிறது.

இந்தநிலையில், ஜெமீமா ரோட்ரிக்ஸ், கடந்த ஆண்டு உலகக்கோப்பை ஒருநாள் போட்டியில் சச்சின் டெண்டுல்கர் கொடுத்த அட்வைஸ் குறித்து தற்போது பகிர்ந்துள்ளார். அந்த சமயத்தில் ஜெமிமாவின் பயிற்சியாளர் பிரசாந்த் ஷெட்டியைத் தொடர்பு கொண்டு ஒரு முக்கிய செய்தியை அனுப்பியுள்ளார்.

அதில், ஆஸ்திரேலியாவுக்கு எதிரான பெரிய இன்னிங்ஸ் மற்றும் அவர்களை வீழ்த்திய மகிழ்ச்சி என கடந்த சில நாட்கள் உனக்கு மிகவும் பரபரப்பாக இருந்திருக்கும் என்பதை என்னால் புரிந்து கொள்ள முடிகிறது. ஆனால், வேலை இன்னும் முடியவில்லை. நாம் இன்னும் இறுதிப் போட்டியை வெல்ல வேண்டியுள்ளது. எனவே, அந்தப் பாராட்டுக்களை எல்லாம் தள்ளி வைத்துவிட்டு, இறுதிப் போட்டியை ஜீரோவில் இருந்து தொடங்க முயற்சி செய் என்று கூறினார். அந்த செய்தி எனது மனதை ரீசெட் செய்ய மிகவும் உதவியது. கடந்த போட்டியில் நாம் என்ன செய்தோம் என்பது அடுத்த போட்டியை வென்று தராது; ஒவ்வொரு போட்டியையும் ஒரு புதிய தொடக்கமாகவே அணுக வேண்டும் என்ற தெளிவை சச்சின் சாரின் அறிவுரை எனக்குக் கொடுத்தது” என்று ஜெமிமா நெகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார்.

இதேபோல், இறுதிப் போட்டியில் 87 ரன்கள் மற்றும் 2 விக்கெட்டுகள் வீழ்த்தி ஆல்-ரவுண்டராக அசத்திய தொடக்க வீராங்கனை ஷஃபாலி வர்மா, போட்டிக்கு முன்பாக தனது தந்தை அனுப்பிய ஆடியோ செய்திதனக்குள் கூடுதல் நெருப்பை ஏற்படுத்தியதாகக் கூறியுள்ளார்.

கடினமாக உழைத்து மைதானத்தில் உனது சிறந்த பங்களிப்பைக் கொடு. இந்திய அணி உலகக் கோப்பையை வெல்வதற்கு ‘ஷஃபாலி வர்மா உதவினார்’ என்பது வரலாற்றில் எழுதப்பட வேண்டும்.”

“அந்த வாய்ஸ் நோட் எனக்குள் கூடுதல் உத்வேகத்தைத் தந்தது. எனக்காக மட்டுமின்றி, எனது தந்தைக்காகவும், நாட்டிற்காகவும் சிறப்பாக விளையாட வேண்டும் என்ற எண்ணம் என்னை மைதானத்தில் முழு எனர்ஜியோடு செயல்பட வைத்தது” என்று ஷஃபாலி வர்மா குறிப்பிட்டுள்ளார்.

உலகக் கோப்பையைக் கைப்பற்றி மகுடம் சூடியுள்ள இந்திய மகளிர் அணி, தங்களது அடுத்த பெரிய சவாலுக்குத் தயாராகிவருகிறது. பர்மிங்காமில் ஜூன் 14, ஞாயிற்றுக்கிழமை அன்று நடைபெறவுள்ள டி20 உலகக் கோப்பை தொடரின் தங்களது முதல் லீக் போட்டியில் இந்திய அணி, பாகிஸ்தானை எதிர்கொள்ளவுள்ளது குறிப்பிடத்தக்கது.

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version