னோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் தமிழ்த்தாய் வாழ்த்து மற்றும் தேசிய கீதம் இசைக்கப்படும் வரிசை மாற்றப்பட்டதாக எழுந்துள்ள விவகாரத்தில், கவிஞர் வைரமுத்து கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், ”

ஆளுநரின் அறிவுறுத்தல்
அச்சம் தருகிறது

மனோன்மணியம் சுந்தரனார்
பல்கலைக்கழகத்தின்
பட்டமளிப்பு விழாவில்
மரபுகள் நொறுங்குகின்றன

ஒரு மாநிலத்தின்
சட்டமன்றத்திலோ
மக்கள் மாளிகையிலோ
ஒரு மாநிலத்தின்
கல்வி எல்லைக்குட்பட்ட
பல்கலைக்கழகத்திலோ
முதலில்
மாநிலமொழியின் வாழ்த்தும்
பின்னர் தேசிய கீதமும்
பாடப்பட்டு வந்ததே மரபு

முதலில் தேசப் பாடலும்
பின்னர் தேசிய கீதமும்
இறுதியில் தமிழ்த்தாய் வாழ்த்தும்
இசைக்கப்பட வேண்டும் என்று
உரிமை மீறிய வரிசையை
அறிவுறுத்துவது
பெருமைக்குரியதல்ல”   எனக் குறிப்பிட்டுள்ளார்.

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version