பசிபிக் பெருங்கடலில் இதுவரை கண்டிராத வகையில் மிகத் தீவிரமான ‘சூப்பர் எல் நினோ’ சூழல் நவம்பரில் உச்சத்தை தொடும் என வானிலை ஆய்வாளர்கள் கணித்துள்ளனர்.

பசிபிக் பெருங்கடலின் மேற்பரப்பு நீர் வழக்கத்தை விட அதிகமாக வெப்பமடைவதே ‘எல் நினோ’ ஆகும். இது உலகளாவிய காற்று வீசும் திசையையும், மழைப்பொழிவையும் மாற்றியமைக்கும். ‘சூப்பர்’ என்று அழைக்கப்படுவதால், இது சாதாரண எல் நினோவை விட மிகத் தீவிரமான விளைவுகளைக் கொண்டிருக்கும். இது பொதுவாக உலக அளவில் வெப்பநிலையை அதிகரிக்கச் செய்யும்.

இது இந்தியப் பெருங்கடலின் இரு பக்கங்களுக்கு இடையே (மேற்கு மற்றும் கிழக்கு) நிலவும் கடல் மேற்பரப்பு வெப்பநிலை வேறுபாடு ஆகும். மேற்கு இந்தியப் பெருங்கடல் (ஆப்பிரிக்கா/சோமாலியா பக்கம்) அரபிக்கடலை விட வெப்பமாகவும், கிழக்கு பகுதி குளிர்ச்சியாகவும் இருந்தால், அது ‘நேர்மறை IOD’ எனப்படும். நேர்மறை IOD உருவானால், அது இந்தியாவிற்கு, குறிப்பாக வடகிழக்கு பருவமழைக்கு அதிக மழையைக் கொண்டுவர உதவும்.

ஒரு வானிலை நிகழ்வு என்பது தற்காலிகமானது அல்ல, அது நிலையானது என்பதை உறுதி செய்ய, தொடர்ந்து 8 வாரங்களுக்கு குறிப்பிட்ட வெப்ப அளவு பதிவாக வேண்டும். தற்போது சோமாலியா கடற்கரையில் வெப்பம் மெல்லத் உயர தொடங்கியுள்ளது. இது முழுமையாக மாறி, இந்தியப் பெருங்கடல் முழுவதும் ஒரு சீரான நேர்மறை நிலையை அடைய செப்டம்பர்/அக்டோபர் வரை ஆகலாம். நவம்பர் மாதத்தில் இந்த நேர்மறை IOD மிக வலுவான நிலையில் இருப்பதால், அந்த சமயத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைய இது சாதகமாக இருக்கும்.

இந்த IOD மாற்றங்கள் குறிப்பாக அக்டோபர் முதல் டிசம்பர் வரை பெய்யும் வடகிழக்கு பருவமழை காலத்தைத்தான் அதிகம் பாதிக்கும். அதனால்தான், தற்போதைய மழைக்கும் இந்த மாற்றங்களுக்கும் தொடர்பு இல்லை என்று தெளிவுபடுத்தப்பட்டுள்ளது. பசிபிக் கடலில் உருவாகும் வெப்பம் மற்றும் இந்தியப் பெருங்கடலில் உருவாகும் இந்த ‘நேர்மறை’ சூழல், நவம்பர் மாதத்தில் ஒன்றாகச் சேரும்போது, அது வடகிழக்கு பருவமழையை இயல்பை விட அதிகமாகவோ அல்லது சிறப்பாகவோ பெய்ய வைக்க வாய்ப்புள்ளது.

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version