இது தொடர்பாக தமிழ்நாடு அரசு உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்த வழக்கில், பி.எம். ஸ்ரீ, சமக்ரா சிக்ஷா திட்டத்தின் நிதியை நிறுத்தி வைத்தது சட்டவிரோதம். புதிய கல்வி கொள்கையை அமல்படுத்தாததால் நிதியை நிறுத்தி வைப்பது ஏற்புடையதல்ல.

கல்வி திட்டத்துக்கான நிலுவை நிதி வழங்கப்படவில்லை. சமக்ரா திட்டத்துக்கான நிதியை 6% வட்டியுடன் ரூ.2,291 கோடி வழங்க உத்தரவிட வேண்டும், அத்தோடு தேசிய கல்விக் கொள்கை 2020 -ஐ அமல்படுத்தினால் தான் நிதி தருவோம் என மத்திய அரசு பிடிவாதம் பிடிப்பதாகவும் தமிழக அரசு குற்றம்சாட்டியுள்ளது. மத்திய அரசுக்கு எதிராக தமிழக அரசு தொடுத்துள்ள வழக்கு விரைவில் விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version