Close Menu
    What's Hot

    வெட்கமில்லையா விஜய் அரசே..?? ஸ்டிக்கர் ஒட்ட கல்வெட்டை அகற்றுவதா? கொந்தளித்த திமுக..!!

    கல்வி இன்று கோயிலாக இல்லை; கடையாக மாறிவிட்டது..! மாணிக்கம் தாகூர் கண்டனம்..!

    நேட்டோ மாநாட்டில் ஜெலன்ஸ்கியை சந்திக்கிறார் டிரம்ப்..!! உக்ரைன் போர் முடிவுக்கு புதிய முயற்சி..!!

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • உலகம்
    • சிறப்புக் கட்டுரைகள்
    • வர்த்தகம்
    • More
      • டெக்னாலஜி
      • LIFESTYLE
      • koilgal
    TN Talks
    Home»Featured»டாஸ்மாக் பார்களுக்கு மேலும் 3 மாத அவகாசமா..?? உயர்நிலை கூட்டத்தில் முக்கிய முடிவுகள் எதிர்பார்ப்பு..!!
    Featured

    டாஸ்மாக் பார்களுக்கு மேலும் 3 மாத அவகாசமா..?? உயர்நிலை கூட்டத்தில் முக்கிய முடிவுகள் எதிர்பார்ப்பு..!!

    editor5By editor5July 6, 2026No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    image 18 3
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    தமிழ்நாடு முழுவதும் சுமார் 4,000க்கும் மேற்பட்ட டாஸ்மாக் மதுக்கடைகள் இயங்கி வரும் நிலையில், அவற்றுக்கு அருகிலுள்ள பார்களின் செயல்பாட்டுக்கு மேலும் மூன்று மாதங்கள் அனுமதி அளிக்க உயர்நிலை கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட வாய்ப்புள்ளது. அதேசமயம், பார்கள் இயங்குவதற்கான 54 விதிகளில் சிலவற்றைத் திருத்தும் திட்டமும் உள்ளது.

    தமிழகத்தில் பெரும்பாலான டாஸ்மாக் கடைகளுக்கு அருகே பார்கள் செயல்பட்டு வருகின்றன. இந்த பார்களை நடத்த முறையான உரிமம் பெற வேண்டும். உரிமத்திற்கு, கட்டிடத் திட்ட அனுமதி, நில அனுமதி, கட்டிட ஸ்திரத்தன்மை சான்றிதழ் உள்ளிட்ட ஆவணங்களை சென்னை மாநகராட்சி, சென்னை மெட்ரோபாலிட்டன் டெவலப்மெண்ட் அத்தாரிட்டி (சி.எம்.டி.ஏ) அல்லது டவுன் அண்ட் கன்ட்ரி பிளானிங் (டி.டி.சி.பி) போன்ற அமைப்புகளிடம் இருந்து பெற்று சமர்ப்பிக்க வேண்டும்.

    இந்த நிலையில், டாஸ்மாக் நிறுவனத்திற்கு பல புகார்கள் வந்துள்ளன. சென்னையில் இயங்கும் பல பார்கள் அமைந்துள்ள கட்டிடங்கள் முறையான திட்ட அனுமதியின்றி கட்டப்பட்டுள்ளதாகவும், உரிமம் பெறுவதற்காக போலி ஆவணங்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதனால் மதுபானம் அருந்தும் பொதுமக்கள் பாதிக்கப்படும் அபாயம் உள்ளது. கட்டிடங்கள் பலவீனமாக இருந்தால் விபத்துகள் ஏற்பட வாய்ப்பு அதிகம்.

    2019-ம் ஆண்டு சென்னை உயர்நீதிமன்றம் ஒரு வழக்கில் முக்கிய உத்தரவு பிறப்பித்தது. அதில், முறையான திட்ட அனுமதி பெற்ற கட்டிடங்களில்தான் மது விற்பனை மற்றும் பார் வசதிகளை அனுமதிக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டது. கட்டிடம் மற்றும் நிலத்துக்கான அனுமதிகள் சட்டப்படி பெறப்பட்டுள்ளனவா என அதிகாரிகள் சரிபார்க்க வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டது.

    இன்று (ஜூலை 6) டாஸ்மாக் நிறுவனத்தின் உயர்நிலை கூட்டம் நடைபெறுகிறது. அரசு வட்டாரங்கள் தெரிவிக்கையில், “இந்தக் கூட்டத்தில் முக்கிய முடிவுகள் எடுக்கப்படும். தற்போதுள்ள பார்களை மேலும் மூன்று மாதங்கள் இயங்க அனுமதிப்பது குறித்து பரிசீலிக்கப்படும். மேலும், 54 விதிகளில் சிலவற்றைத் திருத்தி, கட்டிட அனுமதி ஆணைகள், உணவு பாதுகாப்பு துறை, தீயணைப்பு துறை சான்றிதழ்கள் உள்ளிட்டவற்றை கடுமையாக சரிபார்க்கும் வகையில் மாற்றங்கள் கொண்டு வர திட்டமிடப்பட்டுள்ளது. போலி ஆவணங்கள் கண்டறியப்பட்டால் உரிய நடவடிக்கை எடுக்கும் விதிகளும் இணைக்கப்படும்” என்றனர்.

    இந்தத் திருத்தங்கள் எஃப்.எல்-2 மனமகிழ் மன்றங்களுக்கும் (கிளப்கள்) பொருந்தும். டெண்டர் விடுவதற்கான விதிகளிலும் மாற்றங்கள் செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. முறையான அனுமதி இல்லாத கட்டிடங்களுக்கு உரிமம் வழங்கினால் அது நீதிமன்ற அவமதிப்பாகக் கருதப்படும் என புகார்களில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. இந்த முடிவுகள் டாஸ்மாக் வருவாய் மற்றும் பொதுப் பாதுகாப்பு இரண்டையும் கருத்தில் கொண்டு எடுக்கப்படும் என்பதால், அரசியல் மற்றும் வர்த்தக வட்டாரங்களில் பெரும் எதிர்பார்ப்பு நிலவுகிறது.

    meeting tamil nadu tasmac bar
    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleவிஸ்வரூபம் எடுக்கும் தவெக ஆட்சி கவிழ்ப்பு சதி வழக்கு..!! இன்று ஆஜராகிறாரா செந்தில் பாலாஜி..??
    Next Article கண்ணீருடன் ஓய்வை அறிவித்தார் நெய்மர்..!! ‘எல்லாம் முடிந்துவிட்டது’ என உருக்கம்..!!
    editor5

    Related Posts

    வெட்கமில்லையா விஜய் அரசே..?? ஸ்டிக்கர் ஒட்ட கல்வெட்டை அகற்றுவதா? கொந்தளித்த திமுக..!!

    July 6, 2026

    கல்வி இன்று கோயிலாக இல்லை; கடையாக மாறிவிட்டது..! மாணிக்கம் தாகூர் கண்டனம்..!

    July 6, 2026

    நேட்டோ மாநாட்டில் ஜெலன்ஸ்கியை சந்திக்கிறார் டிரம்ப்..!! உக்ரைன் போர் முடிவுக்கு புதிய முயற்சி..!!

    July 6, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    வெட்கமில்லையா விஜய் அரசே..?? ஸ்டிக்கர் ஒட்ட கல்வெட்டை அகற்றுவதா? கொந்தளித்த திமுக..!!

    கல்வி இன்று கோயிலாக இல்லை; கடையாக மாறிவிட்டது..! மாணிக்கம் தாகூர் கண்டனம்..!

    நேட்டோ மாநாட்டில் ஜெலன்ஸ்கியை சந்திக்கிறார் டிரம்ப்..!! உக்ரைன் போர் முடிவுக்கு புதிய முயற்சி..!!

    ஒரே குண்டு, மொத்த பேரும் காலி.. வாயைவிட்டு வாண்டடாக சிக்கிய டிரம்ப்..!! கொந்தளிப்பில் ஈரான்..!!

    பழனி முருகன் கோவிலில் ரோப் கார் டிக்கெட் பெற புதிய வசதி.. இன்று முதல் ஆன்லைனில் முன்பதிவு..!!

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.