Close Menu
    What's Hot

    வெட்கமில்லையா விஜய் அரசே..?? ஸ்டிக்கர் ஒட்ட கல்வெட்டை அகற்றுவதா? கொந்தளித்த திமுக..!!

    கல்வி இன்று கோயிலாக இல்லை; கடையாக மாறிவிட்டது..! மாணிக்கம் தாகூர் கண்டனம்..!

    நேட்டோ மாநாட்டில் ஜெலன்ஸ்கியை சந்திக்கிறார் டிரம்ப்..!! உக்ரைன் போர் முடிவுக்கு புதிய முயற்சி..!!

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • உலகம்
    • சிறப்புக் கட்டுரைகள்
    • வர்த்தகம்
    • More
      • டெக்னாலஜி
      • LIFESTYLE
      • koilgal
    TN Talks
    Home»Featured»விஸ்வரூபம் எடுக்கும் தவெக ஆட்சி கவிழ்ப்பு சதி வழக்கு..!! இன்று ஆஜராகிறாரா செந்தில் பாலாஜி..??
    Featured

    விஸ்வரூபம் எடுக்கும் தவெக ஆட்சி கவிழ்ப்பு சதி வழக்கு..!! இன்று ஆஜராகிறாரா செந்தில் பாலாஜி..??

    editor5By editor5July 6, 2026No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    image 16 4
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    தமிழக வெற்றிக் கழகம் (தவெக) ஆட்சியை கவிழ்க்க ரூ.180 கோடி மதிப்பிலான பெரும் சதித் திட்டம் தீட்டப்பட்டதாகக் கூறப்படும் பரபரப்பு வழக்கில், முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி இன்று (திங்கட்கிழமை) போலீஸ் விசாரணைக்கு ஆஜராக உள்ளார். அவரது சகோதரர் அசோக்குமாருடன் சேர்ந்து அவர் திருவல்லிக்கேணி காவல் நிலையத்தில் காலை 10.30 மணிக்கு ஆஜராக உள்ளதாக எதிர்பார்க்கப்படுகிறது.

    கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை தொகுதி தவெக எம்.எல்.ஏ. இளையராஜா, தன்னிடம் ரூ.35 கோடி பேரம் பேசப்பட்டதாக சென்னை போலீஸ் கமிஷனர் அமல்ராஜிடம் புகார் அளித்தார். இந்தப் புகாரின் அடிப்படையில், தேர்தல் கருத்துக் கணிப்பு நிறுவனமான ஐ.பி.டி.எஸ். நிறுவனர் திருநாவுக்கரசு உள்ளிட்ட 8 பேர் கைது செய்யப்பட்டனர். இவர்களில் செந்தில் பாலாஜியின் ஆதரவாளர்கள், திமுக மற்றும் அதிமுக பிரமுகர்கள் அடங்குவர்.

    கைதானவர்கள் அளித்த வாக்குமூலத்தில், தவெக எம்.எல்.ஏ.க்களை விலைக்கு வாங்கி ஆட்சியை கவிழ்க்க ரூ.180 கோடி திட்டம் தீட்டப்பட்டதாக பரபரப்பு தகவல்கள் வெளியாகியுள்ளன. போலீஸ் விசாரணையில், இந்தப் பேரப் பேச்சுகள் செந்தில் பாலாஜி மற்றும் அவரது சகோதரர் அசோக்குமார் ஆகியோரின் உத்தரவின் பேரில்தான் நடைபெற்றதாக கைதானவர்கள் தெரிவித்துள்ளனர். இதையடுத்து இருவரும் தலைமறைவாகினர். அவர்களைப் பிடிக்க திருவல்லிக்கேணி போலீசார் சம்மன் அனுப்பினர். சம்மனுக்கு உடனடியாக பதிலளிக்கவில்லை என்றால் கைது உள்ளிட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

    இருவரும் வெளிநாடு தப்பிச் செல்லாமல் தடுக்க நாட்டின் அனைத்து விமான நிலையங்களுக்கும் ‘லுக் அவுட்’ நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. விமான நிலையங்களில் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ள நிலையில், இன்று விசாரணைக்கு ஆஜராகும் செந்தில் பாலாஜியிடம் முக்கிய தகவல்கள் கிடைக்கும் என போலீஸ் வட்டாரங்கள் எதிர்பார்க்கின்றன. இந்த சதித் திட்டம் அரசியல் களத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    தவெக ஆட்சியை பலவீனப்படுத்தும் நோக்கில் திரைமறைவில் நடைபெற்ற இந்தச் சதி, சமீபத்தில் வெளிச்சத்துக்கு வந்தது. எம்.எல்.ஏ. இளையராஜாவின் புகார் மற்றும் கைதானவர்களின் வாக்குமூலங்கள் அடிப்படையில் வழக்கு தீவிரமாக விசாரிக்கப்பட்டு வருகிறது. இந்த வழக்கு தொடர்பாக மேலும் பலருக்கு தொடர்பு இருப்பதாக சந்தேகம் எழுந்துள்ளதால், போலீஸார் விசாரணையை விரிவுபடுத்தியுள்ளனர். செந்தில் பாலாஜியின் ஆஜரான பிறகு வழக்கின் முழு பின்னணியும் தெளிவாகும் என அரசியல் பார்வையாளர்கள் கருதுகின்றனர்.

    Horse Trading Senthil Balaji TVK
    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleமும்பையில் சோக சம்பவம்..!! கனமழையால் இடிந்து விழுந்த கட்டிடம்.. 6 பேர் பரிதாப பலி..!!
    Next Article டாஸ்மாக் பார்களுக்கு மேலும் 3 மாத அவகாசமா..?? உயர்நிலை கூட்டத்தில் முக்கிய முடிவுகள் எதிர்பார்ப்பு..!!
    editor5

    Related Posts

    வெட்கமில்லையா விஜய் அரசே..?? ஸ்டிக்கர் ஒட்ட கல்வெட்டை அகற்றுவதா? கொந்தளித்த திமுக..!!

    July 6, 2026

    கல்வி இன்று கோயிலாக இல்லை; கடையாக மாறிவிட்டது..! மாணிக்கம் தாகூர் கண்டனம்..!

    July 6, 2026

    நேட்டோ மாநாட்டில் ஜெலன்ஸ்கியை சந்திக்கிறார் டிரம்ப்..!! உக்ரைன் போர் முடிவுக்கு புதிய முயற்சி..!!

    July 6, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    வெட்கமில்லையா விஜய் அரசே..?? ஸ்டிக்கர் ஒட்ட கல்வெட்டை அகற்றுவதா? கொந்தளித்த திமுக..!!

    கல்வி இன்று கோயிலாக இல்லை; கடையாக மாறிவிட்டது..! மாணிக்கம் தாகூர் கண்டனம்..!

    நேட்டோ மாநாட்டில் ஜெலன்ஸ்கியை சந்திக்கிறார் டிரம்ப்..!! உக்ரைன் போர் முடிவுக்கு புதிய முயற்சி..!!

    ஒரே குண்டு, மொத்த பேரும் காலி.. வாயைவிட்டு வாண்டடாக சிக்கிய டிரம்ப்..!! கொந்தளிப்பில் ஈரான்..!!

    பழனி முருகன் கோவிலில் ரோப் கார் டிக்கெட் பெற புதிய வசதி.. இன்று முதல் ஆன்லைனில் முன்பதிவு..!!

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.