டாஸ்மாக்கில் பாட்டிலுக்கு ரூ.10 கூடுதலாக வாங்கிய பணியாளர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளதாக டாஸ்மாக் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
டாஸ்மாக்கில் மதுபாட்டில் விலை மீது கூடுதலாக 10 ரூபாய் வைத்து விற்பனை செய்வது குறித்து மதுப்பிரியர்கள் புகார் அளித்து வந்தனர். கடந்த ஆட்சியில் நடந்த இந்த கூடுதல் விலை விவகாரம் தவெக ஆட்சியிலும் தொடர்ந்தால் மதுப்பிரியர்கள் அதிர்ச்சி அடைந்தனர். தங்கள் அதிருப்தியையும் வீடியோக்களாகப் பதிவிட்டு வந்தனர்.
இந்த நிலையில், பாட்டிலுக்கு பத்து ரூபாய் கூடுதலாக வாங்கியதாக, கடந்த 20 நாட்களில் 200 பணியாளர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டு உள்ளதாக டாஸ்மாக் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
பாட்டிலுக்கு பத்து ரூபாய் கூடுதலாக வாங்க கூடாது என்று உத்தரவிடப்பட்டுள்ள நிலையில் உத்தரவை மீறி செயல்படும் ஊழியர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் டாஸ்மாக் எனவும் நிர்வாகம் எச்சரித்துள்ளது.
10 ரூபாய் முக்கியமா, வேலைமுக்கியமா என டாஸ்மாக் நிர்வாகம் எடுத்துள்ள அதிரடி தொடருமா? எந்த அளவுக்குப் பலன் தரும் என்பதே மதுப்பிரியர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.
