தமிழ்நாட்டில் உள்ள 234 தொகுதிகளுக்கான தேர்தல் நாளை நடைபெறவுள்ளது. இதனையொட்டி கடந்த ஒரு மாதகாலமாக நடைபெற்று வந்த அனல் பறந்த பிரசாரங்கள் நேற்று மாலை 6 மணியுடன் ஓய்ந்தது. நாளை காலை 7 மணிக்கு தொடங்கும் வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெறவுள்ளது.

தேர்தலையொட்டி மாநிலம் முழுவதும் டாஸ்மாக் மதுக்கடைகள் தேர்தலுக்கு முன்பாக ஏப்ரல் 21 முதல் 23-ம் தேதி வரை 3 நாட்களும், வாக்கு எண்ணிக்கை நடைபெறும் மே 4-ம் தேதியும் மூடப்படும் என அறிவிக்கப்பட்டது. தொடர்ந்து 3 நாட்கள் மதுக்கடைகள் மூடப்படுவதால், நேற்று முன்தினமே  மதுப்பிரியர்கள் கடைகளில் குவியத் தொடங்கினர். 20-ம் தேதி மட்டும் ரூ.400 கோடிக்கு மதுவிற்பனை நடைபெற்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

கடந்த நாடாளுமன்றத் தேர்தலின் போது ரூ.320 கோடிக்கு மது விற்பனை செய்யப்பட்ட நிலையில், தற்போது கூடுதலாக ரூ.80கோடிக்கு விற்பனை நடந்துள்ளது.

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version