கேஜிஎஃப்’ படத்தின் பிரம்மாண்ட வெற்றிக்குப் பிறகு, நடிகர் யஷ் நடிப்பில் மிகவும் எதிர்பார்க்கப்படும் திரைப்படம் ‘டாக்ஸிக். கீது மோகன்தாஸ் இயக்கத்தில் உருவாகியுள்ள இப்படத்தின் நாயகிகள் அறிமுக டீசர் (Ladies & Ladies Teaser) தற்போது வெளியாகி இணையத்தில் பெரும் வரவேற்பைப் பெற்று வருகிறது.

இந்த டீசரில் நடிகைகள் நயன்தாரா, கியாரா அத்வானி, தாரா சுதாரியா, ருக்மிணி வசந்த் மற்றும் ஹுமா குரேஷி என ஐந்து முக்கிய நாயகிகள் அதிரடி மற்றும் மிரட்டலான தோற்றங்களில் காட்சியளிக்கிறார்கள். ஒவ்வொரு நாயகியும் தனித்துவமான ஸ்டைலில் மிரட்ட, யஷ் தனது வழக்கமான ஸ்டைலில் மாஸ் அவதாரத்தில் களமிறங்கியுள்ளார்.

பெரியவர்களுக்கான விசித்திரக் கதை’ என்ற தலைப்பிற்கு ஏற்றார் போல, டீசரின் தொடக்கத்திலேயே டிஸ்க்ளைமர் (Disclaimer) போட்டு எச்சரித்துள்ளது படக்குழு. டீசர் முழுக்க ‘A’ சர்டிபிகேட் படத்திற்கான கன்டென்ட் மற்றும் விறுவிறுப்பான காட்சிகள் நிறைந்திருப்பது ரசிகர்களிடையே படத்தின் மீதான எதிர்பார்ப்பை பல மடங்கு அதிகரித்துள்ளது.

இந்ததிரைப்படம் உலகம் முழுவதும் வரும் ஆகஸ்ட் 28-ம் தேதி திரையரங்குகளில் பிரம்மாண்டமாக வெளியாக உள்ளது. தமிழ் மற்றும் பிற மொழிகளில் அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள ‘டாக்ஸிக்’, திரையுலகில் மீண்டும் ஒரு அதிர்வலையை ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version