உலகநாயகன் கமல் ஹாசனின் ‘ராஜ் கமல் ஃபிலிம்ஸ் இன்டர்நேஷனல்’   தயாரிப்பில், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்கவிருக்கும் தலைவர் 173 திரைப்படத்தின் அதிகாரப்பூர்வ தலைப்பு  நாளை காலை 10:00 மணிக்கு வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

“ஒரே ஒரு பெயர்… என்றென்றும் கொண்டாட்டம்” (One Name, Forever a Celebration) என்ற அதிரடி வாசகத்துடன் இந்த அறிவிப்பை தயாரிப்பு நிறுவனம் தனது சமூக வலைதளப் பக்கங்களில் வெளியிட்டுள்ளது.

இயக்குநர் மகிழ் திருமேனி இயக்கவிருப்பதாகக் கூறப்படும் இத்திரைப்படத்தை ஆர்.கே.எஃப்.ஐ நிறுவனத்துடன் இணைந்து டர்மெரிக் மீடியா (Turmeric Media) மற்றும் மகேந்திரன் ஆகியோர் தயாரிக்கின்றனர். பல ஆண்டுகளுக்குப் பிறகு ரஜினிகாந்த் – கமல் ஹாசன் கூட்டணி ஒரு திரைப்படத்திற்காக மீண்டும் இணைந்துள்ளதால், நாளை வெளியாகவிருக்கும் இந்தத் தலைப்பு அறிவிப்பை ஒட்டுமொத்த இந்தியத் திரை உலகமும், ரசிகர்களும் மிகுந்த ஆவலோடு எதிர்பார்த்துக் காத்துக் கொண்டிருக்கின்றனர்.

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version