சென்னை சூப்பர் கிங்ஸ் அணி நிர்வாகம் தனது முன்னாள் மற்றும் இன்னாள் வீரர்களை ஒன்றிணைக்கும் ’ரோர் 26’ என்ற பிரமாண்ட ரீயூனியன் நிகழ்ச்சியை நாளை நடத்துகிறது.
மாலை 4 மணி முதல் இரவு 9 மணி வரை சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெறவுள்ள இந்த நிகழ்ச்சியில், சுரேஷ் ரெய்னா, மாத்யூ ஹெய்டன், முரளி விஜய், சுப்ரமணியம் பத்ரிநாத் உள்ளிட்ட அணியின் முன்னாள் நட்சத்திர வீரர்களும், தற்போதைய அணியில் உள்ள வீரர்களும் கலந்து கொள்ள இருப்பதாக சொல்லப்படுகிறது.
மேலும் இந்த நிகழ்ச்சியின் சிறப்பம்சமாக இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமானின் நேரலை இசை நிகழ்ச்சியும் நடைபெறவுள்ளது. நிகழ்ச்சிக்கான டிக்கெட்களை சிஎஸ்கே இணையதளம் மற்றும் District செயலி மூலம் முன்பதிவு செய்து கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஐபிஎஸ் 2026 சீசன் தொடங்குவதற்கு முன்பு ரசிகர்களை உற்சாகப்படுத்தும் வகையில் இந்நிகழ்ச்சி நடைபெறுவது குறிப்பிடத்தக்கது.

