23-வது உலகக் கோப்பை கால்பந்து தொடர் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. எஃப் பிரிவில் உள்ள ஜப்பான் – ஸ்வீடன் அணிகளுக்கு இடையேயான லீக் போட்டி, இந்திய நேரப்படி இன்று காலை 4.30மணிக்கு டல்லாஸ் மைதானத்தில் நடைபெற்றது.

தொடக்கம் முதலே சமபலத்துடன் இரு அணிகளும் விளையாடின. தாக்குதல் மற்றும் தற்காப்பில் சிறப்பாக இரண்டு அணி வீரர்களும் செயல்பட்டதால், முதல் பாதி முழுவதும் எந்த அணியாலும் கோல் அடிக்க முடியவில்லை. இடைவேளைக்குப் பிறகு ஜப்பான் அணி ஆட்டத்தை தீவிரப்படுத்த, 56-வது நிமிடத்தில் முதல் கோலை அடித்தது.

இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக ஸ்வீடன் அணி 62-வது நிமிடத்தில் கோல் அடித்து ஆட்டத்தை 1-1 என்ற சமநிலைக்கு கொண்டு வந்தது. பிறகு இரு அணி வீரர்களும் வெற்றிக்கான 2வது கோலை அடிக்க கடுமையாக போராடிய போதும், எந்த அணியாலும் கோல் அடிக்க முடியாமல் போனது. இதனால் 1-1 என்ற கோல் கணக்கில் இப்போட்டி டிராவில் நிறைவடைந்தது.

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version