ராமதாஸ் சார்பாக டெல்லி உயர் நீதிமன்றத்தில் ஆஜராகி வாதாடி வரும் அருள் பெயரில் தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுவில் புதிய கட்சி தொடங்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது..
அய்யா பாமக எனும் கட்சியை ராமதாஸ் தொடங்க உள்ளதாக கடந்த ஆண்டு நவம்பர் 21 ல் தகவல் வெளியானது. அதனை ராமதாஸ் தரப்பு மறுத்தது. ஆனால், டிசம்பர் 2 அன்று புதிய கட்சியை பதிவு செய்ய தேர்தல் ஆணையத்தில் மனு செய்தனர். பின்னர் தேர்தலில் நிற்பதற்காக உடனடியாக பதிவு செய்யுங்கள் என டிசம்பர் 16 அன்று மீண்டும் மனு தாக்கல் செய்தனர். மனுவில் தவறு இருப்பதாக டிசம்பர் 23 அன்று தேர்தல் ஆணையம் பதில் அனுப்பியதாகவும் அதற்கு ஜனவரி 7 ல் பதில் மனு தாக்கல் செய்தனர்.
எனினும் முகவரி விவரம் தவறாக இருப்பதாக, ஜனவரி 31 அன்று தேர்தல் ஆணையம் சுட்டிக்காட்டியது. அதற்கு பிப்ரவரி 5 அன்று பதில் அளித்தனர். அய்யா பாட்டாளி மக்கள் கட்சி எனும் பெயரில், 2026 தமிழக தேர்தலில் ஒரே சின்னத்தில் நாங்கள் போட்டியிட்டே ஆக வேண்டும். அதற்காக, உடனடியாக பதிவு செய்ய உத்தரவிட வேண்டும் என தில்லி உயர்நீதிமன்றத்தில் வக்கீல் அருள் மனு செய்தார். இதற்கு தீர்வு காணுமாறு கூறி உயர்நீதிமன்றம் வழக்கை முடித்து வத்துள்ளது.
