மின்சாரத்துறை அமைச்சர் நிர்மல்குமார் தலைமையில் நடைபெற்ற ஆய்வுக் கூட்டத்தில் கொள்முதல் மற்றும் ஒப்பந்தங்களில் வெளிப்படைத் தன்மையை உறுதி செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது.

இதன்படி, மின்சாரத்துறை சார்பில் எந்தவொரு டெண்டரை வெளியிடுவதற்கு முன்பாக மூன்று விதமான ஆய்வுகளை மேற்கொள்ள குழுக்கள் அமைத்து மின்வாரியம் உத்தரவிட்டுள்ளது.

சந்தைப் பகுப்பாய்வு மற்றும் மதிப்பீட்டு சரிபார்ப்புக் குழு, உற்பத்தியாளர் குழு மற்றும் குறுக்கு சரிபார்ப்பு குழு ஆகிய மூன்று குழுக்களை மின்வாரியம்  அமைத்துள்ளது.

உள்நாட்டு சந்தையில் மூலப் பொருட்களின் விலையை ஆய்வு செய்யவும், பல்வேறு வகைகளில் விலைத் தரவுகளை மதிப்பீடு செய்யவும், தனியார் நிறுவனங்கள் கொள்முதல் செய்யும் விலைகளையும் ஆய்வு செய்யவும் சந்தை பகுப்பாய்வு மற்றும் மதிப்பீட்டு சரிபார்ப்பு குழு அமைக்கப்பட்டுள்ளது.

பொருட்கள் மற்றும் உபகரணங்களின் விலைகள், வெளிநாட்டு சந்தைகளிடம் ஆய்வு செய்ய உற்பத்தியாளர் மதிப்பீட்டு குழு அமைக்கப்பட்டுள்ளது.

சந்தைப் பகுப்பாய்வு குழு மற்றும் உற்பத்தியாளர் மதிப்பீட்டுக் குழுவின் மூல பெறப்பட்ட டெண்டர்களை பிற மாநில மின்வாரியங்கள் கொள்முதல் செய்யும் விலைகளுடன் ஒப்பிட்டு பார்க்க குறுக்கு சரிபார்ப்பு குழு அமைக்கப்பட்டுள்ளது.

சந்தைப்பகுப்பாய்வு குழு மற்றும் உற்பத்தியாளர் மதிப்பீட்டுக் குழுவின் அறிக்கைகள் கிடைத்த 7 நாட்களில் அதனை முழுமையாக ஆய்வு செய்து குறுக்கு சரிபார்ப்பு குழு அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்.

ஏற்கனவே, வெளியிடப்பட்ட, இறுதி செய்யப்படாத, புதியதாக வெளியிடப்பட உள்ள அனைத்து டெண்டர்களையும் இக்குழுக்கள் ஆய்வுக்கு உட்படுத்த வேண்டும் என மின்வாரியம் உத்தரவிட்டுள்ளது.

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version