இந்து சமய அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டின் கீழ் இயங்கும் பட்டியலில் இடம்பெறாத 8,193 திருக்கோவில்களுக்கு பரம்பரை முறைவழி சாராத அறங்காவலர்களை நியமிப்பதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கான தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

இத்திருக்கோவில்களுக்கான அறங்காவலர் நியமன அறிவிப்பு, கோவில்களின் விவரங்கள், தேவையான தகுதிகள் மற்றும் விண்ணப்பப் படிவம் ஆகியவை www.hrce.tn.gov.in என்ற அதிகாரப்பூர்வ வலைதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளன.

விருப்பமுள்ளவர்கள் விண்ணப்பங்களை இணையவழியாகவே பூர்த்தி செய்தோ அல்லது பதிவிறக்கம் செய்து உரிய ஆவணங்களுடன் இணைத்தோ விண்ணப்பிக்கலாம். மேலும், பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை நேரில் அல்லது விரைவஞ்சல் (Speed Post) மூலமாக சம்பந்தப்பட்ட மாவட்ட உதவி ஆணையர் அலுவலகத்திற்கும் அனுப்பி வைக்கலாம்.

விண்ணப்பிக்க விரும்பும் நபர்கள் வரும் ஆகஸ்ட் 20ம் தேதி மாலை 5:45 மணிக்குள் தங்களது விண்ணப்பங்களைச் சமர்ப்பிக்க வேண்டும் என அறநிலையத்துறை சார்பில் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். இதனிடையே, ஏற்கனவே 1,012 திருக்கோவில்களுக்கு அறங்காவலர்கள் நியமிப்பதற்கும், 14 மாவட்டங்களுக்கு மாவட்டக் குழு உறுப்பினர்களைத் தேர்ந்தெடுப்பதற்கும் அறிவிப்பு வெளியிடப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version