கரூர் விவகாரம் தொடர்பாக தவெக தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனு உள்பட மொத்தம் 5 வழக்குகள் இன்று உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தபோது இரு தரப்பும் காரசார விவாதங்களை முன்வைத்தனர்.

முதலாவதாக, சென்னை உயர்நீதிமன்ற உத்தரவு ரத்து செய்து உச்சநீதிமன்ற ஓய்வுபெற்ற நீதிபதி தலைமையில் விசாரணைக் குழு அமைக்க உத்தரவிடக் கோரி தமிழக வெற்றிக் கழகம் தாக்கல் செய்துள்ள மேல்முறையீடு விசாரணைக்கு வந்தது. வழக்கு உச்சநீதிமன்ற நீதிபதிகள் ஜே.கே.மகேஷ்வரி, அஞ்சாரியா ஆகியோர் அமர்வில் இன்று விசாரணை மேற்கொள்ளப்படுகிறது. தமிழக அரசு சார்பில் அபிஷேக் மனு சிங்வி, முகுல் ரோஹத்கி, வில்சன், ரவீந்திரன் ஆகியோர் வாதாடினர்.

இரண்டு நீதிபதிகளும் மனுவின் சாராம்சம் தொடர்பாக விவாதித்து வருகின்றனர். அப்போது, தவெக தரப்பு வழக்கறிஞர்கள், “பிரசாரத்திற்காக பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டேன் அந்த பிரசாரம் நடைபெற்றன. ஆனால் இந்த விவகாரத்தில் வழக்கில் எதிர்மனுதாரராக இல்லாத ஒருவரை நீதிமன்றம் நேரடியாக விமர்சித்து இருக்கிறது. பல்வேறு கருத்துகளை விஜய் மீது கூறி இருக்கிறது சென்னை உயர்நீதிமன்றம்” என்று வாதிட்டனர்.

இதனையடுத்து நீதிபதிகள், ‘இந்த வழக்கு சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையின் விசாரணை வரம்பிற்கு உட்பட்டது, அப்படி இருக்கையில் சென்னை இருக்கக்கூடிய பிரதான கிளையில் எப்படி இந்த வழக்கு விசாரணைக்கு எடுக்கப்பட்டது என்பதை விவரிக்க வேண்டும்’ என்றனர்.

அப்போது மூத்த வழக்கறிஞர் அரியமா சுந்தரம், ‘இந்த விவகாரத்தைப் பொறுத்த வரைக்கும் உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியுடைய அனுமதி பெற்றே விசாரணை வரம்புக்குள் வராத வழக்கை விசாரணைக்கு எடுக்க முடியும். ஆனால் இந்த விவாகரத்தில் அவ்வாறு எந்த ஒரு அனுமதியும் பெற்றதாக தகவல் இல்லை’ என்றார்.

இதனையடுத்து தவெக தரப்பு மூத்த வழக்கறிஞர் கோபால் சுப்பிரமணியன் கூறுகையில், “இந்த விவகாரத்தை பொருத்தவரைக்கும், விஜய் அந்த சம்பவம் நடைபெற்ற உடனடியாக தப்பித்து சென்றதாக அரசு வழக்கறிஞர் சென்னை உயர்நீதிமன்ற வாதத்தில் தெரிவித்து இருக்கிறார். ஆனால் இந்த கூற்று முற்றிலும் தவறானது. ஏனெனில் காவல்துறை பாதுகாப்புடன் விஜய் அந்த இடத்திலிருந்து வெளியேறினார்.

பின்னர் நீதிபதிகள், ‘இந்த விவகாரத்தில் சென்னை உயர்நீதிமன்ற வழக்கில் விஜய் அல்லது த.வெ.க எதிர்மனுதாரராக உள்ளனரா?’ என்று கேள்வி எழுப்பினர்.

தவெக தரப்பு:- இந்த வழக்கில் விஜய் அல்லது அவரது கட்சியோ எதிர்மனுதாரராக இல்லை. மேலும் சென்னை உயர்நீதிமன்றத்தை பொறுத்தவரைக்கும் பல்வேறு கருத்துக்களை விஜய்க்கு எதிராக கூறி இருக்கிறது.

குறிப்பாக இளைஞர்கள் தொண்டர்கள் இருசக்கர வாகனத்தில் வரும்போது விஜய் உடைய வாகனத்தில் தட்டுப்பட்டு கீழே விழுந்த போது கூட அது தொடர்பாக எந்த வழக்கும் இல்லாத நிலையில், சில காணொளி காட்சிகளை வைத்து விஜய்க்கு எதிரான கருத்தை சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்து இருக்கிறது. குறிப்பாக இவர் எப்படிப்பட்ட தலைவராக இருக்கிறார் என்று விமர்சனங்களை எல்லாம் சென்னை உயர்நீதிமன்றம் வைத்திருக்கிறது.

தவெக தரப்பு கோபால் சுப்பிரமணியம் :-

கரூர் உயிரிழப்பு சம்பவம் நடந்தவுடன் காவல்துறை தான் விஜய்யை அங்கிருந்து செல்லுமாறு கூறினார்கள். அங்கிருந்த தமிழக வெற்றி கழக்க நிர்வாகிகள் சிலர் காவல் துறையால் பாதிக்கப்பட்டவர்களை சென்று பார்க்க அனுமதிக்கப்படவில்லை. விஜய் மற்றும் கட்சியை எதிர்மறுதாரராக சேர்க்க கூட இல்லாமல் அவதூறு கருத்துக்களை சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்திருக்கிறது.

தவெக தரப்பு:-

இந்த சம்பவத்தை விசாரிக்க தமிழ்நாடு காவல்துறை அதிகாரிகள் நியமிக்கப்பட்டு இருக்கிறார்கள் ஆனால் அந்த விசாரணை மீது நம்பிக்கை குறைவாகவே உள்ளது உண்மை நிலை வெளியே கொண்டு வர வேண்டும். அதற்காக உச்ச நீதிமன்றம் ஒரு சிறப்பு விசாரணை குழுவை ஏற்படுத்த வேண்டும்

ஏனெனில், அரசு வழக்கறிஞர்கள் நீதிமன்றத்தில் ஒரு தரப்பாக வாதிட்டு விட்டு, அதன் பின்பாக அரசு ஒரு விசாரணை குழுவை நியமிப்பது என்பது உண்மையை வெளிக்கொண்டு வராது. எனவே உண்மை நிலையை வெளி கொண்டு வருவதற்கு விசாரணை என்பது கண்டிப்பாக நடைபெற வேண்டும் ஆனால் அந்த விசாரணை என்பது உச்சநீதிமன்றம் அமைக்கும் சிறப்பு விசாரணை குழு மூலம் விசாரணை நடத்தப்பட வேண்டும் என்பது எங்களுடைய கோரிக்கை.

ஏனெனில் நாங்கள் ஒரு பிரதான எதிர்க்கட்சியாக வளர்ந்து வருகிறோம் இந்த விவகாரத்தில் நியாயமான ஒரு விசாரணை என்பது வேண்டும். எந்த ஒரு தரப்பையும் சாராத ஒரு விசாரணை என்பதுதான் வேண்டும். அதற்காகத்தான் உச்ச நீதிமன்றம் அமைக்கும் சிறப்பு விசாரணை குழுவை கேட்கிறோம்.

நீதிபதிகள்:-

பரப்புரை தொடர்பாக *வழிகாட்டி நெறிமுறைகளை வகுக்க வேண்டும் என்று ஏதேனும் வழக்குகள் நிலுவையில் உள்ளதா?

தமிழக அரசு :-

அது தொடர்பான ஒரு வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது.

நீதிபதிகள்:-

அப்படி பிரச்சாரம் தொடர்பாக வழிகாட்டு நெறிமுறைகளை வகுக்க கோரிய வழக்கு நிலுவையில் இருக்கும் போது, மற்ற மனுக்களில் நீதிமன்றம் எப்படி உத்தரவிட்டது? தேர்தல் பிரச்சாரம மேற்கொள்வது, road show நடத்துவது தொடர்பாக வழிகாட்டுதல்கள் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனு கிரிமினல் மனுவாக எப்படி பதியப்பட்டது?

தமிழக அரசு தரப்பு :-

உயிரிழப்பு தொடர்பான விவகாரம் என்பதால், வழக்கு கிரிமினல் வழக்காக இருப்பதாக நீதிமன்ற பதிவாளர் அதை உரிய நீதிபதி முன் விசாரணைக்கு பட்டியலிட்டார்.

மற்றொரு மனுதரர் தரப்பு:-

கரூர் சம்பவம் தொடர்பாக தற்போது வரை விசாரணை என்பது முன்னோக்கி செல்லவில்லை. எனவே, இந்த விவகாரத்தில் உயிரிழந்த நபர்களின் குடும்பத்திற்கு நீதி கிடைக்கும் வகையில் உரிய விசாரணை நடத்தப்பட வேண்டும்.

நீதிபதிகள்:-

விஜய் பாதிக்கப்பட்டவர்களை சென்று சந்தித்தாரா இல்லையா என்பது தற்போது தொடர்பில்லாதது. இதிலிருந்து இரண்டு விவகாரங்கள் தெளிவாகிறது.

மதுரை கிளை வழக்கை விசாரித்த அதே சமயம், சென்னை உயர்நீதிமன்றம் மற்றொரு வழக்கை விசாரித்துள்ளது. மதுரை, சென்னை நீதிமன்றங்கள் ஒரே நாளில் வேறு வேறு உத்தரவுகளை எப்படி பிறப்பித்தன? சென்னை உயர்நீதிமன்றம் தாமாக முன்வந்து வழக்குப்பதிவு செய்து எப்படி எஸ்.ஐ.டி உத்தரவு பிறப்பித்தது?

மிழக அரசு தரப்பு:-

41 உயிரிழப்புகள் நடந்துள்ளன, இது கொடூரமானது எனவேதான் நீதிமன்றம் இதனை கையில் எடுத்து உத்தரவை பிறப்பித்து இருக்கிறது.

நீதிபதிகள் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிக்கு சரமாரி கேள்வி :

வழிகாட்டுதல்கள் கோரி தாக்கல் செய்யப்பட்ட வழக்கு இது. குறிப்பாக வழிகாட்டுதல்கள் கோரி மதுரையிலும் ,சென்னையிலும் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. மதுரையில் டிவிஷன் பெஞ்சும் சென்னையில் தனி நீதிபதியும் விசாரித்துள்ளனர்

உயர் நீதிமன்ற மதுரை கிளை விசாரணை எடுத்துக் கொண்ட பிறகு சென்னை உயர்நீதிமன்ற தனி நீதிபதி விசாரணை செய்ய வேண்டிய அவசியம் என்ன எழுந்தது?

தமிழ்நாடு அரசு:-

தற்போது சென்னை உயர்நீதிமன்றம் அமைத்திருக்கக்கூடிய சிறப்பு விசாரணை குழுவை தலைமை தாங்குபவர் ஒரு சிறந்த அதிகாரி. அவர் ஏற்கனவே சிபிஐயில் பணியாற்றி இருக்கிறார். இந்த அதிகாரியை அரசு பரிந்துரைக்க வில்லை. மாறாக நீதிமன்றமே அவருடைய திறமையை பார்த்து இந்த சிறப்பு விசாரணை குழுவை அமைத்தது.

மேலும், கரூர் சம்பவத்தை பொறுத்தவரை, குறிப்பிட்ட இடத்தில் விஜய் 12 மணிக்குப் வருவதாக கூறிவிட்டு மிக தாமதமாக வந்ததால் விபத்து நடந்துள்ளது. 41 பேர் உயிரிழப்பு, 146 பேர் காயமடைந்தனர்.

உயிரிழந்த சிறுவன் தந்தை பன்னீர் செல்வம் தரப்பு:-

தான் தற்போது இந்த நீதிமன்றத்தில் புதிதாக மனு தாக்கல் செய்துள்ளேன். இந்த கரூர் சம்பவத்தில் என்னுடைய மகன் உயிரிழந்துள்ளார். எனவே இந்த சம்பவம் தொடர்பாக ஒரு முழுமையான ஒரு விசாரணை நடத்தப்பட வேண்டும்.

ஏனெனில், அரசு ஒரு விசாரணை ஆணையத்தை அமைத்து இருக்கிறது. உயர் நீதிமன்றம் ஒரு சிறப்பு விசாரணை குழுவை அமைத்திருக்கிறது. ஆனால், இந்த ஆணையத்தின் மீதும் சிறப்பு விசாரணை குழு மீதும் தனக்கு நம்பிக்கை இல்லை. அதனால் இந்த வழக்கை சிபிஐ விசாரித்தால் மட்டுமே முழு உண்மையும் வெளிவரும்.

பாதிக்கப்பட்டவர் என்ற முறையில் நான் இந்த மனுவை தாக்கல் செய்திருக்கிறேன் என்னுடைய மகனின் மரணத்திற்கு உண்மையான காரணங்கள் வெளிவர வேண்டும்.

இருதரப்பு வாதங்களை கேட்டறிந்த நீதிபதிகள், வழக்கு விசாரணை பிற்பகல் 2 மணிக்கு மீண்டும் தொடரும் என வழக்கு விசாரணையை ஒத்தி வைத்தனர்.

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version