Close Menu
    What's Hot

    கடலூர்: விவசாயிகளிடம் லஞ்சம்… நெல் கொள்முதல் நிலைய எழுத்தர் பணியிடை நீக்கம் – அமைச்சர்  வெங்கடரமணன் அதிரடி!       

    சுகாதார சீர்கேட்டில் செங்கல்பட்டு அரசு மருத்துவமனை… நடவடிக்கை எடுக்கப்படுமா?

    மவுனம் காக்கும் மாநில எஸ்.சி./எஸ்.டி. ஆணையம்…. கேள்வி எழுப்பும் நீலம் பண்பாட்டு மையம்

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • உலகம்
    • சிறப்புக் கட்டுரைகள்
    • வர்த்தகம்
    • More
      • டெக்னாலஜி
      • LIFESTYLE
      • koilgal
    TN Talks
    Home»Featured»தவெகவில் முக்கிய பொறுப்பு.. காய் நகர்த்தும் ஜான் ஆரோக்கியசாமி.. விஜய்யின் முடிவால் ஆதவ் அதிருப்தியா?
    Featured

    தவெகவில் முக்கிய பொறுப்பு.. காய் நகர்த்தும் ஜான் ஆரோக்கியசாமி.. விஜய்யின் முடிவால் ஆதவ் அதிருப்தியா?

    editor5By editor5July 8, 2026No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    image 21 3
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    தமிழக முதல்வர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகத்தில் (தவெக) முக்கிய மாற்றம் உருவாகும் வாய்ப்பு உள்ளது. கட்சியின் துணைத் தலைவர் பதவியை ஜான் ஆரோக்கியசாமி குறிவைத்து நகர்வுகளை மேற்கொண்டு வருவதாக நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. ஏற்கெனவே முதல்வர் விஜய்யின் நெருங்கிய நம்பிக்கைக்குரியவராகக் கருதப்படும் ஜான் ஆரோக்கியசாமி, அண்மையில் நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தில் பங்கேற்றார். முதல்வரின் நண்பர் விஷ்ணு ரெட்டியுடன் இணைந்து இந்தக் கூட்டத்தில் அவர் கலந்துகொண்டது பரபரப்பை ஏற்படுத்தியது.

    இந்த நடவடிக்கையை கடுமையாக விமர்சித்த திமுக, அதிமுக மற்றும் பாஜக ஆகிய எதிர்க்கட்சிகள் ஆளுநர் அர்லேக்கரை நேரில் சந்தித்து புகார் அளித்தன. தவெகவில் இதுவரை துணைத் தலைவர் பதவி உருவாக்கப்படவில்லை. தலைவராக விஜய், பொதுச் செயலாளராக புஸ்ஸி ஆனந்த் மற்றும் தேர்தல் மேலாண்மைப் பிரிவு பொதுச் செயலாளராக ஆதவ் அர்ஜுனா ஆகியோர் பொறுப்பில் உள்ளனர். முதல்வராகப் பொறுப்பேற்ற பின்னர் கட்சி நிர்வாகத்தை பெரிதும் புஸ்ஸி ஆனந்த் மற்றும் ஆதவ் அர்ஜுனா ஆகியோரிடம் ஒப்படைத்து விட்டதாகக் கூறப்படுகிறது.

    இந்நிலையில், ஜான் ஆரோக்கியசாமியை கட்சியின் உயர்பொறுப்புக்கு கொண்டு வருவதன் மூலம் அமைப்பு ரீதியாக கட்சியை பலப்படுத்தலாம் என முதல்வர் விஜய் நம்புவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. எனினும், ஜான் ஆரோக்கியசாமியின் நுழைவுக்கு ஆதவ் அர்ஜுனா அணி எதிர்ப்பு தெரிவிப்பதாகச் சொல்லப்படுகிறது. ஏற்கெனவே உட்கட்சி மோதல்கள் உச்சத்தில் இருக்கும் சூழலில், இந்த நடவடிக்கை அதிகாரப் போட்டியை ஏற்படுத்தும் என அஞ்சப்படுகிறது.

    முதல்வர் விஜய்யின் தனிச் செயலாளர் ஜெகதீஷ் பழனிசாமி நியமனத்திலும் ஏற்பட்ட சர்ச்சை இன்னும் அடங்காத நிலையில், இந்தப் புதிய முயற்சி கட்சிக்குள் புதிய பதற்றத்தை உருவாக்கியுள்ளது. உள்ளாட்சித் தேர்தலை முன்னிட்டு ஜான் ஆரோக்கியசாமியை கட்சியில் இணைத்து பொறுப்பு வழங்கும் முடிவை விஜய் விரைவில் எடுக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன் மூலம் கட்சியின் தேர்தல் இயந்திரத்தை வலுப்படுத்தும் நோக்கம் இருப்பதாகக் கூறப்படுகிறது. முதல்வர் இதுவரை இந்த விவகாரம் குறித்து எந்தக் கருத்தும் தெரிவிக்காதது கட்சியினரிடையே பல்வேறு யூகங்களுக்கு வழிவகுத்துள்ளது.

    cm vijay john arokiyasamy TVK
    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Article11 வயது சிறுமி வன்கொடுமை செய்து கொலை!. முக்கிய குற்றவாளி என்கவுண்டரில் சுட்டுக்கொலை!
    Next Article தேர்தல் இன்று நடந்தாலும் 180 சீட் விஜய்க்கே.. உறுதியாக பேசிய வைகோ..!!
    editor5

    Related Posts

    கடலூர்: விவசாயிகளிடம் லஞ்சம்… நெல் கொள்முதல் நிலைய எழுத்தர் பணியிடை நீக்கம் – அமைச்சர்  வெங்கடரமணன் அதிரடி!       

    July 19, 2026

    சுகாதார சீர்கேட்டில் செங்கல்பட்டு அரசு மருத்துவமனை… நடவடிக்கை எடுக்கப்படுமா?

    July 19, 2026

    மவுனம் காக்கும் மாநில எஸ்.சி./எஸ்.டி. ஆணையம்…. கேள்வி எழுப்பும் நீலம் பண்பாட்டு மையம்

    July 19, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    கடலூர்: விவசாயிகளிடம் லஞ்சம்… நெல் கொள்முதல் நிலைய எழுத்தர் பணியிடை நீக்கம் – அமைச்சர்  வெங்கடரமணன் அதிரடி!       

    சுகாதார சீர்கேட்டில் செங்கல்பட்டு அரசு மருத்துவமனை… நடவடிக்கை எடுக்கப்படுமா?

    மவுனம் காக்கும் மாநில எஸ்.சி./எஸ்.டி. ஆணையம்…. கேள்வி எழுப்பும் நீலம் பண்பாட்டு மையம்

    தென்னிந்தியத் திரைப்பட எழுத்தாளர் சங்கத்தின் தலைவரானார் இயக்குநர் சேரன்.

    பிரசவ அறுவை சிகிச்சையின்போது உயிரிழந்த பெண் … சடலத்தை விட்டுவிட்டு ஓடிய மருத்துவர்கள்

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.