உள்ளூர் மக்களுக்கு வேலைவாய்ப்பு மற்றும் காஞ்சிபுரம் மாவட்ட வளர்ச்சி ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு இந்த அரசு செயல்படும் என வெளிநாடு வாழ் தமிழர் நலத்துறை அமைச்சர் தென்னரசு தெரிவித்துள்ளார்.
ஸ்ரீபெரும்புதூர் சட்டமன்ற தொகுதி உறுப்பினரும், வெளிநாடு வாழ் தமிழர் நலத்துறை அமைச்சருமான, எஸ் பி கே தென்னரசு இன்று காஞ்சிபுரம் வருகை தந்தார். அவருக்கு கட்சியினர் சார்பில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. தொடர்ந்து பேரறிஞர் அண்ணா நினைவு இல்லத்துக்கு சென்ற அமைச்சர் தென்னரசு, அண்ணாவின் திருஉருவ சிலைக்கு மலர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
இதனைத் தொடர்ந்து ரயில்வே சாலையில் உள்ள அம்பேத்கர் சிலை, பூக்கடைசத்திரம் அருகே அமைந்துள்ள அழகுமுத்துக்கோன் சிலை மற்றும் கங்கைகொண்டான் மண்டபம் பகுதியில் அமைந்துள்ள பெரியார் சிலைக்கு மலர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
பின்னர் செய்தியாளர்களை அமைச்சர் தென்னரசு சந்தித்துப் பேசினார்.
மக்கள் தலைவர் மீதும் எங்கள் மீதும் அளித்துள்ள நம்பிக்கையை 100 விழுக்காடு காப்பாற்றுவோம். மக்களுக்காகத்தான் எங்கள் சேவை தொடரும். இது மக்களுக்கான பொற்கால ஆட்சியாக அமையும்.
காஞ்சிபுரம் மாவட்டத்தின் வளர்ச்சி மற்றும் உள்ளூர் மக்களின் வேலை வாய்ப்புகளை கருத்தில் கொண்டு இந்த அரசு செயல்படும்.
உள்ளூர் மக்களுக்கு தொழிற்சாலைகளில் வேலை வாய்பு பெற்றுத் தருவது எனது முதல் நோக்கம்.
இந்த பொற்கால ஆட்சியில் காஞ்சிபுரம் மாவட்டம் மாபெரும் வளர்ச்சி பெறும்.
சிறுமி விவாகரத்தில் மட்டுமல்லாது, இளைஞர்களின் போதையில் இருந்து மாற்ற இந்த அரசு கடுமையான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
பரந்தூர் விமான நிலைய விவகாரத்தில் இன்றும் பரந்தூர் மக்களுடந்தான் நாங்கள் நிற்கிறோம் என அமைச்சர் எஸ்.பி.கே. தென்னரசு தெரிவித்தார்.
